புதன், 19 ஏப்ரல், 2023

'புதுசு’ எதற்கு? பழையதே நீடிக்கக் ‘கர்த்தர்’ அனுமதிப்பாரா?!

'புதிய வாழ்விற்கான துவக்கத்தின் பாதையாக மரணம் உள்ளது' என, ஏப்ரல் 18, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

திருத்தந்தையார் அவர்களின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள 4637ஆவது டுவிட்டர் செய்தியாகும் இது. https://www.vaticannews.va/ta/pope/news/2023-04/pope-tuesday-twitter-message.html


‘பிறக்கிறோம், வாழ்கிறோம், மரணத்தைத் தழுவுகிறோம்என்பதுதான் மனித இனத்துக்கான விதி[இயல்பாய் அமைந்தது, அதாவது இயற்கை நிகழ்வு].


“இந்த மரணம் புதிய வாழ்க்கைக்கான ஆரம்பமாகவும் உள்ளது” என்கிறார் திருத்தந்தை. 


மரணத்திற்குப் பிறகும் ‘புதிய’ வாழ்க்கை என்ற ஒன்று இருப்பது உண்மையானால், பழைய வாழ்க்கையையே தொடர[சில/பல ஆயிரம் ஆண்டுகளுக்கேனும். ஹி... ஹி... ஹி!!!] மனிதர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கலாமே? கடவுள் ஏன் மரணத்தைத் தந்தருளினார்?

படைத்து, வாழ அனுமதித்துவிட்டு, குறுகிய காலத்தில் சாகடித்து, புதியதொரு வாழ்க்கையைத் தந்தருளுவதன் நோக்கம்தான் என்ன?

இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் பழைய வாழ்க்கையில் ஏராளமான துன்பங்களும் கொஞ்சம் இன்பமும் நிறைந்திருக்கின்றன.


“மரணத்திற்குப் பிறகு நாம் பெறவிருக்கும் அந்தப் புதிய வாழ்க்கையில் துன்பமே இல்லாமல், அல்லது அது மிக மிக மிகக் குறைவாகவும், இன்பம் மிக மிக மிக அதிகமாகவும் இருக்கக்கூடுமா தந்தையாரே?”


அந்தவிதமான வாழ்க்கையைப் பெற்று இன்புற்று வாழ்பவர்களுக்கான/வாழ்ந்தவர்களுக்கான சிறிய அல்லது பெரிய பட்டியலொன்றைத் தந்தையார் தந்தருளுதல் வேண்டும் என்பது, மதச் சார்பு ஏதுமின்றி, ஒரு மனிதனாக மட்டுமே வாழும் ஒரு சாமானியனான அடியேனின் வேண்டுகோள்.


இது மனப்பூர்வமானதும் உண்மையானதுமான வேண்டுகோளும்கூட.

===============================================================================