செவ்வாய், 18 ஏப்ரல், 2023

வேறு வேறு மாநிலம்! ஒவ்வொன்றும் அதி சுவாரசியம்!!['ta.quora.com'இல் சுட்டது]

*ஆந்திரா: 

லாரியைப் பிடித்தாவது அமெரிக்கா சென்றுவிடுவார்கள். ஒரு நாள் கூகிள் வேலை செய்யலைன்னா பாதிப் பேர் ஊருக்குக் கிளம்பி வந்துவிடுவார்கள்.


*கேரளா: 

வீட்டுக்கு நாலு பேருக்கு அமீரகத்தில் வேலை. ஆண்டுக்கு ஐந்து கிலோ தங்கம் லட்சியம். மூணு கிலோ நிச்சயம்.


*கர்நாடகா: 

தனி மாநிலக் கொடி. இவர்களைத் தவிர எல்லோருக்கும் பெங்களூரில் ஐடி துறையில் வேலை கிடைக்கும்.


*மகாராஷ்டிரம்

காலையில வடா பாவ். மதியம் டப்பா வாலாவே துணை. இரவு சுடச் சுடச் சமையல். மின்சார ரயிலில் குடித்தனம்.


*ஒரிஸ்ஸா: 

ஆண்டுக்கு 6 மாதம் புயல் மழைல அல்லல்பட்டு, மீதி மாதம் வரப்போகும் புயலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.


*உ.பி / ம.பி: 

பான் பராக்கைத் தடை செய்தால் முக்கால்வாசிப் பேருக்கு மாரடைப்பு வந்துவிடும். ச, ஸ உச்சரிப்பு வரவே வராது(உதா: ரிஜர்வேஜன், பிக் பஜார்). ஏழு கடல், ஏழு மலை தாண்டியாவது ரயில்வே பரீட்சை எழுத வருவார்கள்(டிக்கெட் எடுக்காமதான்!). கால் பணமானாலும் கவர்மெண்ட் உத்யோகமாக்கும்! மாப்பிளைக்கு ரயில்வேயில் வேலைன்னா வரதட்சணை ஐந்து லட்சம்.


*பிஹார்: 

இன்னமும் சில பேர் லல்லு ரொம்ப நல்லவர்னு நம்புறாங்க. பாதிப் பேர் மும்பைக்கு, கேரளாவுக்கு, தமிழகத்துக்குன்னு கட்டடம் கட்டப் போய்ட்டாங்க.


*ஜார்கண்ட்: 


ஒரே காடு. காட்டுல ஆயிரத்துச் சொச்சம் பேர். அதுல முக்காவாசிப்பேர் நக்சல்பாரிகள். அந்தக் காட்டுல ஒரு சிங்கம். அதுக்குப் பேரு தோணி.


*காஷ்மீர்: 

பாதி நாள் கடையடைப்பு. மீதி நாள் கல்லெறிப் போராட்டம். இங்கயும் இருக்க முடியலை; பாக்கையும் நம்ப முடியலை. திரிசங்குச் சொர்க்கம்.


*தமிழ்நாடு: 

மதராசிகள் திறமைசாலிகள்; மாங்கு மாங்குனு வேலையை இழுத்துப்போட்டுச் செய்வார்கள். என்ன செய்தோம் என்று விளக்கும்போது ஆங்கிலம் கொஞ்சம் தகராறு செய்யும். எனவே, வாயில வடை சுடத் தெரிந்த சில வடக்கு மேனேஜர்கள் இங்கே நன்றாக வாழ்கிறார்கள். தெற்கு தேய்கிறது.

வீரபாண்டியக் கட்டபொம்மன் வசனத்தை இன்னமும் மறக்காமல் இருப்பவர்கள் இவர்கள்..... “மோடி எங்களோடு வயலுக்கு வந்தாரா? நாத்து நட்டாரா? இல்லை, 15 லட்சம் அக்கவுண்டுலதான் போட்டாரா?”

=====================================================================