இஸ்லாம் மதம்[‘மார்க்கம்’ என்கிறார்கள்] பல நல்ல அம்சங்களை உள்ளடக்கியது என்றால் அது மிகையில்லை.
*கடவுள் அல்லா[ஹ்] ஒருவரே என்னும் கோட்பாடு.
*தாங்கள் செய்யும் எந்தவொரு நற்செயலுக்கும் இறைவனே காரணம்[”எல்லாப் புகழும் இறைவனுக்கே”] என்று சொல்லித் தன்னடக்கத்துடன் வாழ்வது.
*எந்தவொரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன்னரும், “அல்லா விரும்பினால்” என்று அவன் மீதான தங்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துதல்.
*ஒரு நாளில் 5 முறை[?] கடவுளைத் தொழுவது கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது!
*வழிபாட்டிடத்தில்[மசூதி] சாதி வித்தியாசம், சமூக ஏற்றத்தாழ்வு என்று எந்தவொரு பாகுபாட்டிற்கும் இடம் தராமல் கூட்டமாகத் தொழுகை மேற்கொள்ளல்.
*பண்டிகை நாட்களில் ஏழைபாழைகளுக்கு உதவும் உயர் குணம்.
*விழாக்காலங்களில் பல நாட்கள் விரதம் இருந்து, கஞ்சி குடித்து வாழ்ந்து மனதைத் தூய்மைப்படுத்தும் மிக நல்ல பழக்கம்.
இப்படிப் பாராட்டுதலுக்குரிய வகையில் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட இஸ்லாமியர்கள், பண்டிகைக் காலங்களுக்குரிய கடமைகளைச் செய்துமுடித்த பிறகு, ‘கறி விருந்து’ உண்டு மகிழ்ந்து பண்டிகையைக் கொண்டாடி முடிப்பது நம் நெஞ்சை உறுத்துகிறது[ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 மணி நேரத்தில் ரூ2 கோடிக்கு ஆடுகள் விற்பனை[இன்னொரு சந்தையில் ரூ6 கோடிக்கும் மேல்] என்பது ஊடகச் செய்தி https://tamil.timesxp.com/samayam/tamilnadu/vilupuram/rs-4-crore-goats-were-sold-on-the-occasion-of-ramzan/videoshow/99661700.cms].
பண்டிகையின் தொடர்ச்சியாக, இந்தக் கறி விருந்தை நடத்துவது தேவைதானா?[இடைவெளி கொடுத்துப் பிறிதொரு நாளில் நடத்தலாம்?].
இதைக் கருணக் கடவுளான அல்லா[ஹ்] அனுமதித்திருப்பதாக வேறு சொல்கிறார்கள். சில ஆதாரங்கள் கீழே:
//கத்தியை நன்றாகத் தீட்டி, இறைவன் பெயரைச் சொல்லி அதன்[விலங்கு] கழுத்தில் அறுக்க வேண்டும்// https://m.facebook.com/JaffnaMuslim/photos/a.302926556462800/1422599547828823/
//மனிதன் தனது உணவுக்காகச் சில உயிரினங்களைக் கொல்லலாம் என்று இஸ்லாம் கூறுவது உண்மைதான்// https://eagathuvam.com.[தரப்பட்டுள்ள முகவரிகளில், உயிரினங்களைக் கொன்று உண்பது தவறல்ல என்பதற்கு மிக விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளமை அறியத்தக்கது.
கொல்லும்போது உயிர்களுக்கு வலி தெரியாமலிருக்க இஸ்லாம் கூறும் முறையை[பிஸ்மில்லாஹ் சொல்லுதல்]ப் பின்பற்றுதல் வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இங்கே நாம் குறிப்பிட விரும்புவது.....
“நன்கு தீட்டிய கத்தியால், சில வினாடி நேரம் கழுத்தை அறுத்தாலே விலங்கு வலியை உணராமல் இறந்துவிடும்’ என்பது மனிதர்களாகிய உங்களின் கண்டுபிடிப்பு.
உண்மை இதுவாக இருக்க, இச்செயலுக்குக் குரானையும் அல்லாவையும் ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள்?” என்பதுதான்.
ஆடோ மாடோ வேறு எந்தவொரு விலங்கோ, தவிர்க்க இயலாத காரணங்கள் இருப்பதாகச் சொல்லி, கொன்று கூறுபோட்டு, தலைக்கறி, குடல்கறி, வறுகறி, ஈரல், ரத்தப் பொறியல், பிரியாணி என்று விதம் விதமாய்ச் சமைத்து வயிறாரவும் ருசியாகவும் உண்டு மகிழலாம். தடுப்பாரில்லை.
நாம் திரும்பத் திரும்ப எழுப்ப விரும்புவது மேற்கண்ட அதே கேள்வியைத்தான்.
“உங்களின் கொலைத் தொழிலுக்குக் குரானையும் அல்லாவையும் ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள்?”
வலி தெரியாத வகையில் ஓர் உயிரைக் கொல்வது குற்றமல்ல என்பதை அல்லா ஏற்பதாகச் சொல்வது சரி என்றால், நமக்கு விரோதியாக உள்ள ஒருவனை வலி தெரியாத வகையில் கொல்வதும்[சில வினாடிகளில் கழுத்தை அறுத்து] தவறில்லை என்றாகிறது.
இப்படியான சமாதானைத்தை முன்வைத்து, ஒருவனை இன்னொருவன் கொல்வது குற்றமில்லை என்பதை அல்லா என்னும் நீதிபதி ஏற்கக்கூடுமாயினும், நடைமுறை வாழ்வில், நம் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் ஏற்கமாட்டார்கள். ஹி... ஹி... ஹி!!!
இது விசயத்தில் இந்துமதத்தவர்கள் புத்திசாலிகள். கருணாமூர்த்திகள் எனப்படும் பெத்தப் பெரிய கடவுள்களை வம்புக்கு இழுக்காமல், கருப்பனார், முனியப்பன், மாகாளியம்மா, மாரியம்மா என்று கறிவிருந்து உண்டு களிப்பதற்கென்றே கொஞ்சம் கடவுள்களைக் கைவசம் வைத்திருக்கிறார்கள்.
கிறித்தவர்களைப் பொருத்தவரை, ‘கொல்விருந்து’க் கோட்பாட்டை வெகு சுருக்கமாக முடித்துக்கொண்டார்கள்![புதிய ஏற்பாட்டின்படி, கிறிஸ்தவர்களுக்குக் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே அசைவ உணவுக் கட்டுப்பாடு, ‘சிலைகளுக்குப் பலியிடப்பட்ட உணவு, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றைத் தவிர்ப்பது மட்டுமே[en.wikipedia.org].
* * * * *