அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 1 மே, 2023

வன்புணர்வுக் குற்றங்களும் வேடிக்கை பார்க்கும் ஆண் இனமும்!!!

லக அளவில் கற்பழிப்புகள் நிகழாத நாடுகளே இல்லை என்கின்றன ஆய்வறிக்கைகள்[‘லிச்சென்ஸ்டைன்’ என்னும் ஒரு துக்கிளியூண்டு நாடு மட்டுமே விதிவிலக்காக உள்ளது. 2020இல் இதன் மக்கள் தொகை 38137 மட்டுமே. எகிப்து, மொசாம்பிக், அஜர்பைஜான், ஆர்மீனியா, தஜிகிஸ்தான், லெபனான் போன்ற நாடுகளில் கற்பழிப்பு எண்ணிக்கை குறைவு].

கற்பழிப்புகளின் எண்ணிக்கை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது[கற்புக்கரசனான அயோத்தி ராமன் ஆண்ட இந்தப் புண்ணிய பூமியில் தினமும் 85க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின்றன.. புகார் செய்யப்படாத, அல்லது புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாத வன்புணர்வுக் குற்ற வழக்குகள் மிகப் பல].

அதிகக் கற்பழிப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் குறிப்பிடத்தக்கவை:

தென்னாப்பிரிக்காவில் ஓர் ஆண்டில் மட்டும் 66196 வழக்குகள் பதிவாயின. நான்கு ஆடவரில் ஒருவர் தான் வன்புணர்வு செய்தது உண்மையே என்று ஒப்புக்கொண்டது உலகம் கண்டிராத அதிசயம்.

போட்ஸ்வானா, ஸ்வீடன் ஆகியவை 2&3ஆம் இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

நம் பரம எதிரியான பாகிஸ்தான் மற்ற விசயங்களில் எப்படியோ, சிறுமியர் கற்பழிப்பில் நம் நாட்டைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

நம் இன்னொரு அதி தீவிர விரோதியான சீனாவும் இது விசயத்தில் மாபெரும் சாதனை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஓர் ஆண்டில், திருமணம் ஆன பெண்களில் 40% பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

கற்பழிப்பில் ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற, அறிவியலிலும், பொருளாதாரத்திலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள நாடுகளும் பெரும் பங்கு வகிக்கின்றன.

இப்படியாக, உலகின் பல நாடுகளும் நிகழ்த்தியுள்ள வன்புணர்வுச் சாதனைகளின் விளைவாக, , 2020இல் உலகளவில் சுமார் 35% பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்திருப்பதாக வன்புணர்வு பற்றிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்திற்கும் குறைவானவர்களே காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்கிறார்களாம். எஞ்சியுள்ள 60% பேரும் தயங்காமல்/அஞ்சாமல் புகார் செய்திருந்தால்.....


பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்களின் சதவீதம் மிகக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாக அமைந்திருக்கும்.


உலக அளவில் பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைக்கு வன்புணர்வு செய்யும் கயவர்களே காரணம்.


அவர்களைக் கண்டறிந்து வழக்குத் தொடுத்துத் தண்டனை பெற்றுத்தருவதைக் காவல்துறை செய்கிறது. ஆயினும், குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.


பெண்களைத் தெய்வநிலையில் வைத்துப் போற்றுவதையும், புகழ்ந்து பேசி இன்ப நுகர்வுக்கான சிறந்த சாதனமாக அவர்களைப் பயன்படுத்துவதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ள ஆடவர் உலகம் காலங்காலமாய்ப் பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த வன்புணர்வுக் கொடுமையை ஒழிப்பதில் முழுக்கவனம் செலுத்தவில்லை; மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.


காரணம்.....


வன்புணர்வுச் சுகம் காண்பதில் அதீத ஆசை[வெறி] கொண்டவர்களில் பலரும் ஆணினத்தைச் சார்ந்தவர்கள் என்பதுதான்[தண்டனைக்கு அஞ்சுவோர் ஆசையைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள்].


அவர்களில், வன்புணர்வில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் யாரெல்லாம் என்பதைக் கண்டறிவது எளிதல்ல; சாத்தியமும் இல்லை.


இந்நிலையில், “எங்களுக்கு நீதி கிடைக்கும்வரை ‘அது’ விசயத்தில் ஆடவர்களை நெருங்க அனுமதிக்க மாட்டோம்” என்று உலக அளவிலான பெண்களின் அமைப்புகள் ஒருங்கிணைந்து போராடுவதே, வன்புணர்வுக் குற்றங்களை ஒழிப்பதற்கான ஆகச் சிறந்த வழியாகும்!


***தகவல்கள் இணையத்தில் சேகரித்துத் தொகுக்கப்பட்டவை.