மனிதர்களின் இன்ப நுகர்வுக்கு ஆதாரமாக இருப்பனவற்றுள் ஆண், பெண் என்னும் இருபாலரிடையே இடம்பெறும் உடலுறவு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இருவரும் இதை மனம் ஒத்து விரும்பிச் செய்கிறபோது பெறுகிற இன்பத்தின் அளவு இருவருக்குமே மனநிறைவு அளிப்பதாக அமைந்திட வாய்ப்புள்ளது.
ஒருவர் உடன்படாதபோது, இன்னொருவர் மட்டுமே பெறும் இன்பத்தின் அளவு குறைவது உறுதி.
அளவைக் கருத்தில் கொள்ளாமல், தாபம் தணிந்தால் போதும் என்று, கால நேரம் கருதாமல் பெண்ணைப் பலவந்தப்படுத்தியேனும் புணரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது அவ்வப்போது நிகழும் பாலியல் தொடர்பான குற்றச் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அவர்கள், தங்களின் காம வெறியைத் தணித்துக்கொள்ளக் காலம், நேரம், சூழல், பெண்ணின் மனநிலை என்று எதையும் பொருட்படுத்துவதில்லை.
*உறங்குகிற ஒருத்தியுடன் அவளின் உடன்பாடு இல்லாமலே உடலுறவைத் தொடங்கி, அவள் விழிப்புப் பெற்ற நிலையிலும் விரகதாபம் தணித்திடும் சமூக விரோதிகளும் உள்ளனர்.
*மருந்து கொடுத்து முழு மயக்கம் எய்திய நிலையில் கலவி சுகம் பெறும் கயவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
*அடித்து உதைத்து உயிரைப் பறித்துவிடுவதாக அச்சுறுத்தி அந்தரங்க ஆசையைத் தணித்துக்கொள்ளும் அக்கிரமக்காரர்கள் உலகெங்கிலும் உள்ளனர்.
*ஒருத்தியைக் கடுமையாகத் தாக்கி, அவள் மரணத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் நிலையிலும் மருவிச் சுகம் காண்பதும் காலத்தின் கொடுமைதான்.
*அருவருக்கத்தக்க வகையில் அசிங்கமாகப் பேசியும், ஆபாசப் படங்கள்/காணொலிகள் காட்டியும் அப்பாவிப் பெண்களை வசப்படுத்தி, அந்தரங்கச் சுகம் அனுபவிக்கிறார்கள் ஆண்கள் என்பதும் உண்மையே.
*மனம் புரிவதாக வாக்குறுதி கொடுத்து இணங்கச் செய்து இச்சையைத் தணிப்போரும் உளர்.
*அடித்து உதைத்து, கழுத்தை நெரித்து அவளின் உயிர் உடம்பிலிருந்து பிரிந்துகொண்டிருப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் புணரும் குரூர நிகழ்வுகளும் இங்கு இல்லாமலில்லை.
*மூச்சு முற்றிலுமாய் அடங்கிச் சவம் ஆகிவிட்டபோதும் வன்புணர்வைத் தொடர்வதும் நிகழ்கிறது.
***இவை அனைத்திற்கும் மேலாக, புதைக்கப்பட்டவளின் சடலத்தைத் தோண்டி எடுத்துப் புணர்ச்சி செய்து உடலுறவுச் சுகம் காணும் கொடூரங்களும் இந்த மண்ணில் இடம்பெறவே செய்கின்றன.
மேலே பட்டியலிடப்பட்ட அவல நிகழ்வுகள் பற்றிய செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகின்றன.
சடலத்தைத் தோண்டி எடுத்து வன்புணர்வு செய்ததற்கான ஓர் ஆதாரம் கீழே.
//பாகிஸ்தான் நாட்டின் குஜ்ராத் அருகே சாக் கமலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு பெண் உடல்நலக்குறைவால் மே 4ஆம் இறந்துள்ளார். (அப்பெண் மிகவும் அழகாக இருப்பதாக சொல்லப்படுகிறது) அதன்பின், அந்த பெண்ணை அந்த ஊரில் உள்ள கல்லறை தோட்டத்தில் உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பினர். இந்நிலையில், அன்று இரவு அதே ஊரை சேர்ந்த சில மர்ம நபர்கள், அந்த கல்லறை தோட்டத்திற்கு வந்து, புதைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் பிணத்தை தோண்டி எடுத்து, இரவு முழுவதும் உடலுறவு செய்துள்ளனர். பிறகு, அந்த பிணத்தை புதைக்காமல் அருகில் வீசிச்சென்றுள்ளனர்.
மறுநாள் அந்த இறந்த பெண்ணுக்கு சடங்குகள் செய்ய அவரின் உறவினர்கள் கல்லறை தோட்டத்திற்கு வந்தனர். அப்போது, அந்த இளம்பெண்ணை புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்ட நிலையில், இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சுடுகாடு முழுவதும் தேடியபோது, அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் அந்த இளம் பெண்ணின் பிணம், ஆடையின்றி அலங்கோலமாக கிடந்துள்ளது. அப்பெண்ணை பலாத்காரம் செய்ததற்கான அடையாளம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்த பெண்ணின் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதே ஊரை சேர்ந்தவர்கள் இப்படியான காரியத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர், 17 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்//