காலை எழுந்தவுடன் காலி வயிற்றில் தண்ணீர் குடிப்பதால்[குறைந்தபட்சம் கால் லிட்டர்] விளையும் அளப்பரிய நன்மைகள்:
=அது குடலைச் சுத்தம் செய்கிறது.
=குடலின் இயக்கத்தைச் சீராக்குகிறது.
=மலச்சிக்கலுக்கு வாய்ப்பே இல்லை.
=செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்படும்.
=உடலின் மெட்டபாலிசத்தைச்{மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள்[ஊட்டச்சத்து] பிரிந்து நம் உடலில் சேருகிற நடைமுறை} சீராக வைக்க உதவுகிறது.
=இரவுப் பொழுதில் உடம்பில் உருவான அனைத்து நச்சுக்களும் வெளியேற்றப்படுகின்றன.
=உடலின் வெப்பநிலை சீராகப் பராமரிக்கப்படுகிறது.
=உடலில் நிகழும் அனைத்து இரசாயன மாற்றங்களையும் ஒழுங்குபடுத்துகிறது வெறும் வயிற்றில் குடிக்கும் தண்ணீர்.
=தோலின் ஆரோக்கியம் மேம்படும்.
=முகப்பரு உருவாவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறையும்.
=தோலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
=ஒட்டுமொத்த உடம்பும் மிகு பொலிவுடன் காட்சியளிக்கும்.
***தகவல்கள் இடம்பெற்ற தளத்தின் முகவரியை முறையாகச் சேமிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.