அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 11 மே, 2023

‘சிறுநீர்ப்பை’[Urinary bladder]ப் புற்றுநோய்! அறியத்தக்க பல அறிகுறிகள்!!

நோயின் ஆரம்ப நிலையில் அறிகுறிகள் தென்படாததால், முன்னெச்சரிக்கையாகச் சிகிச்சை பெறுவது இயலாமல்போகிறது. எனவே, கீழ்க்காணும் அறிகுறிகள் தோன்றத் தொடங்கிய உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.


அறிகுறிகள்:

*அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.

*சிறுநீரில் ரத்தம்[hematuria > Blood in your urine is called hematuria.] காணப்படும். ஆனால், வலி ஏதும் இராது. ஆயினும், சிகிச்சை பெறுவதில் தாமதம் கூடாது.

*ரத்தம் கோடு கிழித்தது போல் காட்சியளிக்கும்.

*சிறுநீர் பழுப்பு நிறமாக இருக்க வாய்ப்புள்ளது. வலியையும் எரிச்சலையும் உணரலாம். கொட்டுவத[‘வெடுக்... வெடுக்...’] போலவும் இருக்கும்.

*உடம்பின் எடை குறைந்துவரும்.

*பசி எடுப்பது அரிதாகவே நிகழும். உடல் நலம் காக்கும் செல்கள் அழியத்தொடங்குவதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைந்துவரும். 

*கால்களுக்கான ரத்த ஓட்டம் குறைந்து அவை வீங்கத் தொடங்கும்.

*கீழ்முதுகில் வலி. இது முதுகின் ஒரு பக்கத்தில் தென்படும்.

*புற்றுநோய்ச் ’செல் கட்டிகள்’ உருவாகி, அவற்றின் எண்ணிக்கை அதிகமாகும்போது வலி முதுகெங்கும் பரவும்.

*சிறுநீர்ப்புற்று நோயின் அளவு அதிகரிக்கும்போது, சிறுநீரை வெளியேற்றுதல் இயலாமல் போகலாம். முதுகு மட்டுமல்லாமல், வயிறு, எலும்பு போன்றவற்றிற்கும் வலி பரவும்.

*உடல் மெலியத்தொடங்கும். 

*உடற் சோர்வு அதிகரிக்கும்.

*செல்களில் புற்றுநோய் உருவாகும் ஆரம்பக் கட்டத்திலேயே சிறுநீரகங்களில் அழுத்தம் ஏற்பட்டுப் படிப்படியாக அது செயலிழக்கத் தொடங்குகிறது.

எச்சரிக்கை!

சிறுநீர்ப் புர்றுநோயின் தாக்கம் அதிகரித்த பிறகு அதைக் குணப்படுத்துவது மிகக் கடினம் என்பதால், அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்போதே மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெறுவது மிக மிக முக்கியம்.

Visible blood in your pee (hematuria): 

Healthcare providers can also spot microscopic amounts of blood in pee when they do a urinalysis.

Pain when you pee (dysuria): This is a burning or stinging sensation that you may feel when you start to pee or after you pee. Men and DMAB may have pain in their penises before or after peeing.

Needing to pee a lotFrequent urination means you’re peeing many times during a 24-hour period.

Having trouble peeing: The flow of your pee may start and stop or the flow may not be as strong as usual.

Persistent bladder infections: Bladder infections and bladder cancer symptoms have common symptoms. Contact your healthcare provider if you have a bladder infection that doesn’t go away after treatment with antibiotics.

*****நோய் குறித்த பொதுவான தகவல்களை அறிவதற்காக மட்டுமே இணையங்களில் மருத்துவம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றைக்கொண்டு ‘சுய சிகிச்சை’ செய்துகொள்வது மிகத் தவறான செயல் என்று மருத்துவத்துறை எச்சரிக்கிறது!