ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர், “உலகமே போற்றி வணங்கும் ராமர், சீதை போன்ற ஹிந்துக் கடவுள்களை இழிவாகப் பேசுவோரால் தமிழக முதல்வருக்குக் கெட்ட பெயர் ஏற்படுகிறது. அத்தகையோரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்[https://www.dinamalar.com/news_detail.asp?id=3318614].
ராமரையும் சீதையையும் உலகமே போற்றி வணங்குகிறது என்கிறார் இந்த ஜீயர்.
புளுகுப் புராணங்களில் மட்டுமே தலைவனாகவும் கடவுளாகவும் பேசப்படும் இந்த ராமனை[+சீதை] உலகின் எந்தெந்த நாடுகளெல்லாம் போற்றி வணங்குகின்றன என்பதற்கு ஒரு சிறு பட்டியலேனும் போடுவாரா இவர்?
தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவிடாமல் தடுக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் கூட்டத்தைச் சார்ந்த இவர்தான், தமிழ்நாடு முதல்வருக்குக் கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்று கவலைப்படுகிறார்.
நல்ல தமாசு.
“இந்துக் கடவுள்களை விமர்சிப்பது போல் இஸ்லாமிய, கிறிஸ்துவக் கடவுள்களை விமர்சித்தால் தமிழகத்தில் என்னென்ன நடந்திருக்கும் தெரியுமா?” என்று கொதித்துப் பொங்கியிருக்கிறார் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் என்பவர்[‘தின மலம்’, 12.05.2023].
“ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல, இந்து மதம்தான் எல்லார் வாயிலும் விழுது. இந்த அரைவேக்காடுகள் மற்ற மதங்களின் மூடநம்பிக்கைகளைச் சாடுவாங்களா? தப்பித் தவறிச் சாடினாலும் அவங்களால் ரோட்டுல நடமாடவே முடியாது” என்று ‘டவுட் தனபாலு’ என்னும் போலிப் பெயரில் முக்கி முனகியிருக்கிறான் ‘தின மலம்’காரன்.
இவர்களுக்கான பதில்.....
இந்து மதத்தோடு ஒப்பிடும்போது இஸ்லாமிலும் கிறித்தவத்திலும் மூடநம்பிக்கைகள் மிகக் குறைவு என்பதால் குறைந்த அளவில் அவை சாடப்படுகிறன[இது இவர்களுக்கும் தெரியும்] என்பதோடு, அவற்றால் நம் சந்ததியினர் பாதிக்கப்படுவதும் மிகக் குறைவு[அவர்கள் சிறுபான்மையினர் என்பதால்] என்பதும் அறியத்தக்கது.
அவர்கள் ஆளுக்கு ‘ஒரு’ கடவுளை மட்டுமே[கிறித்தவத்தில், +மேரி மாதாவும், ஏசுவும்] வணங்குவதால், கடவுளின் பெயரால் உருவாக்கப்பட்ட மூடநம்பிக்கைகள் அம்மதங்களில் குறைவு.
இந்துமதத்திலோ ஆயிரக்கணக்கான கடவுள்கள். அவர்களை மையமாக வைத்துக் கற்பிக்கப்பட்ட கதைகள் ஆயிரக்கணக்கில் அல்ல, பல்லாயிரக்கணக்கில் உள்ளன.
திரும்பத் திரும்ப அந்தக் கதைகளை மக்களிடம் சொல்லிச் சொல்லி, இதழ்களிலும் நூல்களிலும் எழுதி எழுதி, மூடத்தனங்களிலிருந்து மக்கள் விடுபடவே இயலாத கேவலமான நிலையை உருவாக்கிவிட்டார்கள் இந்துமதப் பிரகிருதிகள்.
ஆக, இந்துமதம் அதிக அளவில் சாடப்படுவதற்கு இவையும் இவை போன்ற இழிநிலைகளும்தான் காரணம்.
இந்நிலை தவிர்க்கப்பட வேண்டுமானால்.....
புற்றீசலாய்ப் பெருகிக் கிடக்கும்/பெருகிக்கொண்டிருக்கும் அத்தனைக் கடவுள்களுக்கும் சமாதி கட்டிவிட்டு, ஒத்தைக் கடவுள் வழிபாட்டுக்கு வழிசெய்யப்படுதல் வேண்டும்.
இது விசயத்தில் கருத்து முரண்பாடுகளைத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்பதோடு, விவாதித்து ஒரு முடிவுக்கு வருவதும் இயலாது என்றால்.....
அனைத்து இந்துமதத்தவருக்கும் அறிவிப்புச் செய்து, வாக்கெடுப்பு நடத்தலாம்.
சிவபெருமானோ, கிருஷ்ண பரமாத்மாவோ, பிள்ளையாரோ முருகனோ, பூதேவியோ, ஸ்ரீதேவியோ, சத்துக்குரு ஜக்கி வாசுதேவோ ஓட்டெடுப்பில் அதிகபட்ச வாக்குகள் பெறும் கடவுளை இந்துமதத்தின் ஒரே கடவுளாக்கலாம்.
அந்த ஒரு கடவுளை மட்டுமே, வழிபடுதல் வேண்டும் என்று பக்தர்களிடம் நயமாகப் பேசி இணங்கச் செய்வது மிக அவசியம்.
கடவுள்களில் ஒருவரைத் தேர்வு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தவயோகி ஜீயர் அவர்களே தலைமை ஏற்றுச் செய்து முடித்தல் வேண்டும் என்பது நம் அன்பான வேண்டுகோள்!