தமிழ்நாட்டின் பூம்புகார் நகருக்கு அருகில் ஒரு கிராமம்.
இந்துக்களாக இருந்த மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழு குடும்பத்தவர்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு கிறித்தவ மதத்திற்கு மாறினார்கள்.
15 ஆண்டுகள் கழிந்த நிலையில்.....
மாவட்ட ஆட்சியரிடம், குறைதீர் கூட்ட நிகழ்வில் அந்த ஏழு குடும்பத்தவரும் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள்.
தாங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் கிராமத்தவர்கள் தங்களை ஒதுக்கி வைத்ததாகவும், மீன் பிடிக்க விடாமலும், கடைகளில் உணவுப் பொருள்கள் வாங்கவிடாமலும், தங்களின் குழந்தைகளை மற்றக்[இந்து] குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்காமலும் தடுப்பதோடு, அவர்களைப் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கி, மீண்டும் இந்து மதத்தைத் தழுவும்படி மிரட்டுவதாக மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மேலும், இவ்வாறு அட்டூழியம் புரியும் இந்து மதத்தவர் மீது உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டிருக்கிறார்கள்.
இத்துடன் அவர்களின் கோரிக்கை முடிந்துவிடவில்லை.
கருணைக் கொலை செய்துகொள்ளத் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
"தயவுசெய்து, கருணை காட்டுங்கள், எங்களைக் கொல்லுங்கள்" என்று எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தியிருந்தார்களாம்.
அட்டூழியக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னதில் தவறில்லை என்றாலும், 15 ஆண்டுகள் 7 கிறித்தவக் குடும்பத்தவரும் பொறுமை காத்தது நம்மைப் புருவம் உயர்த்த வைக்கிறது.
எந்த மதத்தை விரும்பித் தழுவினார்களோ அந்த மதத் தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டவில்லையா என்னும் கேள்வியும் எழுகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் தழுவிய கிறித்தவ மதம், எதிர்த்துப் போராடும் மன வலிமையைத் தராமல், கோழைகளாய்க் கருணைக்கொலையை நாடுவதற்குத்தான் கற்றுக்கொடுத்ததா?
சம்பந்தப்பட்ட 7 கிறித்தவ மதக் குடும்பத்து ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
* * * * *