பத்து வினாடிகள் ஒரு பெண்ணை ஓர் ஆண் உற்றுப் பார்ப்பதே குற்றம் என்கிறது நம் ‘தேசிய மகளிர் நல ஆணையம்’[https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/702148059942105/].
காரணம், பார்க்கிற இடமும், பார்க்கிற முறையும்தான்.
பெண்ணின் கழுத்தையே உற்றுப் பார்ப்பவன், வாய்ப்புக் கிடைத்தால், கழுத்திலுள்ள நகையைத் திருடத் திட்டமிடுகிறான் என்று பொருள்.
பத்து வினாடிகள் பெண்ணின் அழகான உதடுகளை உற்றுப் பார்த்தால் உதடுகளைச் சுவைக்கவும், மார்பகங்களைப் பார்த்தால் அங்கே கை வைக்கவும் அவன் தயங்கமாட்டான் என்று சொல்லலாம்.
பத்து வினாடிப் பார்வையாலேயே பெண்ணைக் கற்பழித்துவிடுகிற பொல்லாத கில்லாடிகளும் இங்கே இருக்கிறார்கள்.
ஒரே ஒரு வினாடி ஒருத்தியை ஒருவன் தொடக்கூடாத இடத்தில் தொட்டாலே, தொட்டவன் கையை வெட்டலாம் என்று தேசிய மகளிர் நல ஆணையம் பரிந்துரை செய்கிற காலமும் வரும்.
தேசிய மகளிர் நல ஆணையத்தை நாம் பாராட்டும் அதே நேரத்தில், இத்தாலி நாட்டில் நீதிபதி ஒருவர் இது தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பு, உலகெங்கும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
“ஓர் இளம் பெண்ணை 10 வினாடிகளுக்குக் குறைவான நேரம் தொடுவது குற்றமில்லை” என்பதே அந்தத் தீர்ப்பு.
ஒரு பள்ளிச் சிறுமியை, அப்பள்ளியின் காவல்காரன் பின்புறம் தொட்டு அவளின் கீழாடையைக் கழற்றியிருக்கிறான். அவனுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் தொடுத்த வழக்கில்தான் இப்படியான தீர்ப்பு வழங்கியிருக்கிறார் அந்த நீதிபதி.
பித்தம் தலைக்கேறிய நிலையில் அவர் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
பித்தம் தெளிய நீதிபதியின் ஆடையை நீக்கி அவரை நிர்வாணமாக்கினால் போதும்.
அதற்குத் தேவையான நேரம் பத்தே பத்து வினாடிகள்!