அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

காலை உணவுத் திட்டம்... ‘மலம் கக்கும்’ தினமலர்க்காரனைக் கைது செய்க!!!

மூன்று வேளையும் உணவுண்ண வழியில்லாத உழைக்கும் வர்க்கத்துப் பிள்ளைகளைப் பள்ளிக்கு வரவழைக்கத்தான், அவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் பெருந்தலைவர் காமராசரால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அவர்களுக்குக் ‘காலை உணவு’ வழங்குவதையும் வழக்கமாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இதன் மூலம் கல்வி கற்க வரும் உழைப்பாளிகள் குடும்பத்துப் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது உறுதி.

மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தைக் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், ஊடகங்களும் பாராட்டுகின்றன,

தமிழர் நலனுக்கு எதிரான நச்சுக் கருத்துகளைப் பரப்பும் ‘தினமலர்’ என்னும் ‘தினமலம்’ மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளது.

கீழ்க்காண்பது அந்த இதழின் இன்றையத் ‘தலைப்பு’ச் செய்தி:


வீட்டில் உணவுண்ண வசதி இல்லை என்பதால்தான், ஏழைக் குழந்தைகளுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அரசு.

இந்த உண்மையை மறைத்து, [ஏழைப்]பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குக் காலை உணவு அளித்துப்[படத்தில் குறிப்பிட்ட சில வரிகள் இடம்பெறவில்லை. கவனக்குறைவாகப் படம் எடுத்தது காரணம்] பள்ளிக்கு அனுப்புவதாகச் சொல்கிறான் இந்த விஷமி.

இது போதாதென்று, வீட்டில் சாப்பிடுவதோடு பள்ளியிலும் சாப்பிடுவதால், அவர்கள் மலம் கழிக்க நேர்ந்து, கக்கூஸ் நிரம்பி வழிவதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறான் இந்தக் கழிசடை.

பாமரர் குடும்பத்துப் பிள்ளைகளுக்குத் தூங்கி எழுந்தவுடம் கக்கூஸ் போகும் பழக்கம் இல்லை என்கிறானா இந்தத் தினசரிப் புளுகன்?

இவனின் இந்தச் செயல் உழைப்பாளி வர்க்கத்தை மட்டுமல்ல, அரசின் ‘காலை உணவு வழங்கல்’ என்னும் உலகம் போற்றும் உயரிய பணியையும் கொச்சைப்படுத்துகிறது.

தமிழ்நாடு அரசு, சற்றேனும் தயக்கம் காட்டாமலும், தாமதம் செய்யாமலும் சம்பந்தப்பட்டவர்களை[தினமலர் நிர்வாகம் மண்டலவாரியாக, ‘கோவை, திருச்சி, மதுரை...’ என்று பிரிக்கப்பட்டுள்ளது] கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது மிக மிக அவசியமாகும்.