வெள்ளி, 1 செப்டம்பர், 2023

புற்று நோயை முற்றிலுமாய்க் குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு!!![பகிர்வு]

புற்று நோய்க்கு ஊசி மருந்து கண்டறிந்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது, இங்கிலாந்தின் பொதுச் சுகாதார அமைப்பு.

புற்று நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டாலே அவரை மரணபீதி தொற்றிக்கொள்ளும். அந்த அளவிற்கு உடலையும், மனதையும் ஒருசேரப் பாதிக்கும் வியாதிதான் புற்று நோய். 


சமீப ஆண்டுகளில் அதன் பரவல் வேகமெடுத்துள்ளது. 2022 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் 19 லட்சம் பேர் புற்றுநோயின் பிடியில் சிக்கியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்குத் தீவிரமாக அது பரவிவருகிறது. 


புற்றுநோய்க்கு ஊசி மருந்தைக் கண்டறியப் பல நாடுகள் போட்டி போட்டுகொண்டிருந்த நிலையில், இங்கிலாந்து அந்தப் பந்தயத்தில் வெற்றி கண்டுள்ளது. 


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, பொதுச் சுகதார அமைப்புதான் அந்தச் சாதனையைத் தன்வசம் ஆக்கியுள்ளது. 


புற்று நோய்க்கான மருந்து உடலில் செலுத்தப்பட்டால், அது உடலில் இயங்கத் துவங்க 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம்வரை ஆகிவிடும். ஆனால், புதிதாகக் கண்டறியப்பட்ட, இந்த ஊசியைச் செலுத்திய 7 நிமிடங்களில் மருந்து செயல்படத் துவங்கிவிடும் என்கிறார்கள்.


இது ஒரு நோய் எதிர்ப்புச் சிகிச்சை மருந்து. உடலில் செலுத்திய உடனே, புற்றுநோய்ச் செல்களைத் தேடி தேடி வேட்டையாடும். 


நுரையீரல், மார்பகம், கல்லீரல்,  சிறுநீர்ப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு இது பயனளிக்கும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 


இந்த ஊசி மருந்து தற்போது, இங்கிலாந்தின் மருந்து மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 



ஒப்புதல் வழங்கியவுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்[நன்றி: தந்தி டிவி, 1 செப்டம்பர் 2023, 11:11 AM].