பக்கங்கள்

புதன், 27 செப்டம்பர், 2023

சிறுமியர் கடத்தல்! பாதுகாப்புப் பணியில் நடிகர்>ரசிகர் சங்கங்களின் பங்கு!!

இன்று[27 Sep, 2023 03:37 PM]இந்து தமிழ்’ இதழில்[https://www.hindutamil.in/] வெளியான ஒரு செய்தியின் இறுதிப் பத்தியின் கடைசி வரி அடுத்து இடம்பெற்றுள்ளது.

//பாலியல் வன்கொடுமைக்குள்ளான 12 வயதுச் சிறுமி ஒருவர் உதவி கோரி, தெருத்தெருவாகத் திரிந்து, கடைசியில் சாலையில் மயங்கி விழுந்த சம்பவம் மனிதகுலத்துக்கே அவமானம்.//

அவ்வப்போது நிகழும் இம்மாதிரியான கொடூரங்களைச் செய்தியாக்கி வெளியிடுவதன் மூலம், ஊடகங்கள் தங்களுக்கான கடமைகளைச் செய்கின்றன.

அரசியல் கட்சிகள் பலவும் கண்டனங்களைப் பதிவு செய்வதை வழக்கமாக்கியுள்ளன.

குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தண்டனைக்குள்ளாக்கும் முயற்சியில் காவல்துறை வழக்கம்போல் தீவிரம் காட்டுகிறது.

எவரும் உதவிட முன்வராத அவல நிலையில், காவல்துறையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெறும் மேற்கண்ட சிறுமிக்கு 1 கோடி உதவித்தொகை வழங்குதல் வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தம்முடைய x இல் பதிவிட்டுள்ளார்.

சிறுமிகள்[வயசுப் பெண்கள் என்றால் சற்றேனும் தற்காத்துக்கொள்ள முயன்றிருப்பார்கள்] மனித உருவில் நடமாடும் மிருகங்களால் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாகும்போதெல்லாம்[படும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது] வழக்கமாக நடைபெறும் சடங்குகளே இவையெல்லாம்.

குற்றவாளிகளைக் கவல்துறை தேடிப் பிடித்தாலும், சாட்சிகளைச் சேகரித்து வழக்குத் தொடுப்பதும், நீதிமன்றத்தால் அவர்கள் தண்டிக்கப்படுதல் என்பதும் வெகு அரிது என்றே சொல்லலாம்.

இந்த அவல நிலை மாற வேண்டுமானால்.....

சிறுமிகள் கடத்தப்படுவதைக் காண நேர்ந்தால், காணும் பொதுமக்கள், தங்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருப்பினும் அத்தனையையும் புறக்கணித்து, ஒருங்கிணைந்து செயல்பட்டுச் சிறுமிகளைக் கடத்தும் கயவர்களைத் தண்டிக்க வேண்டும்.

சட்டதிட்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களை அடித்துக் கொல்வதும் வரவேற்கத்தக்கதே[காவல்துறை என்கவுண்டர் போல] .

நடுவணரசு இதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்குவதோ, திருத்துவதோ மிக மிக அவசியம்.

மேலும், இக்குற்றங்களைத் தடுப்பதில் தங்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை மக்கள் உணர்ந்து செயல்படுவது மிக மிக மிக முக்கியம்.

கட்சி அமைப்புகளும், நடிகர்களுக்கான ரசிகர் மன்றங்களும் இல்லாத ஊர்களே இல்லை. இவற்றால் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் மட்டுமே பயனடைகிறார்கள்.

தொண்டர்களின் நேரமும் பொருளும் பெருமளவில் விரையம் ஆகிறது. அவற்றைப் பயனுள்ள வகையில் செலவழிப்பது பாராட்டுக்குரியதாகும்.

இவர்கள் நினைத்தால், ‘சிறுமியர் வன்கொடுமைத் தடுப்புச் சங்கம்’ என்பது போன்ற பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி, சிறுமி[+இளம்பெண்கள்]களுக்கான பாதுகாப்பு அரணாகச் செயல்படலாம்.

சிந்திப்பார்களா?!

விரிவான செய்திக்கு..... https://www.hindutamil.in/news/india/1129507-cctv-shows-bleeding-12-year-old-rape-victim-in-ujjain-seeking-help-being-shooed-away.html