வெடியும், மத்தாப்பும், புத்தாடையும், பலகாரமும் ஒருசேரக் கிடைக்கும் என்று சின்னஞ்சிறுசுகளைக் குதூகளிக்கச் செய்வதன் மூலம் பிரபலப்படுத்தப்பட்ட பண்டிகை இது
திராவிடனை ஆரியன் அழித்தான் என்ற கதையைk கொண்டாடுவதன் மூலம் தமிழன் தன்னைத்தானே இழிவுபடுத்தும் நாள் இது.
இக்கொண்டாட்டத்தால் விளையும் பல தீங்குகள்:
காற்று மாசு, ஒலி மாசு, நீர் மாசு, நில மாசு என்று பல மாசுகளை இப்பண்டிகை உண்டுபண்ணுகிறது.
வெடிவெடிப்பதால் ஏற்படும் அளவுக்கு அதிகமான ஓசை காது செவிடு, மூளைப் பாதிப்பு, மன அதிர்வு, இரத்த அழுத்தம் போன்றவற்றை உருவாக்குகிறது.
வெடிமருந்துகள் நீரையும், நிலத்தையும் பாழாக்குகின்றன. காசு கரியாகிறது.தீக்காயம்: வெடிவெடிக்கையில், தீக் காயங்கள் ஏற்பட்டுக் கணிசமானவர்கள் இறக்கின்றனர்.
பணவிரயம்: தேவையற்ற ஆடம்பரம், அதிகப்படியான செலவுகளால் பணவிரயம் ஏற்படுவதோடு, மக்கள் கடனாளிகளாகவும் ஆகின்றனர்.
வயிற்றுக் கோளாறு: ஒரே நாளில், ஒரே வேளையில் அளவிற்கு அதிகமாக அதிக உணவுகளை, பலகாரங்களை, இனிப்புகளை உண்பதால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மருத்துவச் செலவும் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்: ஒரே நாளில் எல்லோரும் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதால் நெரிசல், தவிப்பு, கூடுதல் கட்டணம் என்று பல கேடுகள் விளைகின்றன.
கடைகளில் குவிதல்: எல்லோரும் ஒரே நேரத்தில் கூட்டமாகக் குவிவதால், நெரிசல், களவு, தரமற்ற பொருட்கள் விற்பனை, விலை உயர்வு என்று பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
* * * * *
உதவி: