* * * * *
இந்த நோய்[ஆஸ்டியோபோரோசிஸ்] உருவாவதற்கான காரணங்கள்:
மரபு: இந்த நோய் 80% மரபு சார்ந்தது. அதாவது, ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி ஆகியோர் பாதிக்கப்பட்டிருப்பது.
பெண் பாலினம்: மாதவிடாய் நின்றுபோனவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அகியோரில் இரண்டு பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் உள்ளது.
2021ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, 2016ஆம் ஆண்டில் ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக 381,000 ஆண்கள் எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வயது: 40 வயதில் நாம் மெதுவாகவும், அடுத்த தசாப்தத்தில் மிக வேகமாகவும் இந்நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம்.
இனப் பின்னணி: வடக்கு ஐரோப்பிய மற்றும் ஆசிய வேர்களைக் கொண்டவர்கள் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் மிகுதியும் பாதிக்கப்படுகின்றனர். மத்திய தரைக்கடல் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கப் பின்னணியைக் கொண்டவர்களுக்கு இதை எதிர்க்கும் சக்தி அதிகம் உள்ளது.
எடை: உடல் பருமன் நீரிழிவுக்கு வழிவகுப்பது போல, மிகவும் மெலிந்திருக்கும் பெண்களுக்கு, இந்நிலை எலும்புப்புரை நோய்க்கு வித்திடுவதாக உள்ளது.
புகைத்தல்: இந்நோய்க்கான காரணிகளில் இதுவும் ஒன்று.
குடிப்பழக்கம்: சில ஆய்வுகள் லேசான-மிதமான குடிப்பழக்கம் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கலாம் என்கின்றன.
உடற்பயிற்சி: நடைபயிற்சி[+மராத்தான் ஓட்டம்], நடனம், படிக்கட்டுகளில் ஏறுதல், மெல்லோட்டம்[ஜாகிங்], நீச்சல், போன்றவற்றால் எலும்பு வலிமை பெறுகிறது.
உணர்ச்சிவசப்படுதல்&மன அழுத்தம்: இவை எலும்பைப் பலவீனப்படுத்துகின்றன.
புதிய எலும்புகளை வலுப்படுத்தும் செல்கள் ஆஸ்டியோபிளாஸ்ட்கள் & ஆஸ்டியோசைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.
எச்சரிக்கை: மருத்துவரிடம் சிகிச்சை பெறாவிட்டால், இந்நோய் மிகக் கடுமையானதாக மாறும். கனமாக இருமும்போதும், உடம்பை முறுக்கும்போதும்கூட எலும்பு முறிந்துவிட வாய்ப்புள்ளது.
* * * * *
ஆஸ்டியோபோரோசிஸிற்கான மருந்துகள்[நம்மால் விளங்கிக்கொள்ள இயலாதவை]:
உறிஞ்சக்கூடியவை.
பிஸ்பாஸ்போனேட்டுகள்[இவை ஆஸ்டியோபோரோசிஸுக்கான முக்கிய மருந்துகளாகும். வாய்வழி பிஸ்பாஸ்போனேட்டுகளில் போனிவா(ஐபாண்ட்ரோனேட்), ஃபோசாமேக்ஸ் மற்றும் பினோஸ்டோ(அலெண்ட்ரோனேட்), ஆக்டோனல் மற்றும் அடெல்வியா(ரிஸ்ட்ரோனேட்) ஆகியவை அடங்கும்.
பாதிப்பைப் பொருத்து, இவை தினசரி, அல்லது வாராந்தோறும், அல்லது மாதந்தோறும் வழங்கப்படும். ரீக்லாஸ்ட்(ஜோல்டெரோனிக் அமிலம்) என்பது ஆண்டுக்கு ஒருமுறை நரம்பு வழி உட்செலுத்தப்படுவது.
பக்க விளைவுகள்:
குமட்டல்
நெஞ்செரிச்சல்
உணவுக்குழாய் எரிச்சல்
இரைப்பைப் புண்கள்
எலும்பு, மூட்டு, தசை வலி
* * * * *
சற்றேனும் மருத்துவம் சார்ந்த புரிதல் உள்ளவர்கள் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்கி மேலும் பல பயனுள்ள தகவல்களைப் பெறலாம்: