310,650 போர் வீரர்களின் அரிய உயிர்களை அது இழந்துள்ளது[அண்மைச் செய்தி].
உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கான காரணம் நியாயமானதாகவே இருந்தாலும், இன்னும் பல மாதங்கள் என்ன, ஆண்டுக்கணக்கில் அதனுடன் போர் நடத்தினால் வெற்றி 100% நிச்சயம் என்றாலும்.....
போரால் நேர்ந்த பொருள் இழப்பை, உக்ரைனிடமிருந்து பெறும் தண்டத்தொகையால்[தோற்ற நாடு வென்ற நாட்டுக்கு ‘நஷ்ட ஈடு’ வழங்குவது வழக்கத்தில் உள்ள ஒன்று] ஈடு செய்திட முடியும் என்றாலும், பறிபோன 310,650 வீரர்களின் உயிர்களை மீட்டெடுக்க இயலுமா?
அது சாத்தியமே இல்லை.
போர் என்றால் உயிரிழப்புகள் நேர்வது இயல்புதான் என்றாலும் அதற்கு ஒரு வரன்முறையே இல்லையா?
பிறிதொரு நாடு ரஷ்யாவின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கவோ, வேறு காரணங்களுக்காகவோ தாக்குதல் நிகழ்த்தியிருப்பின்[அல்லது, ரஷ்யாவின் மீது போர் திணிக்கப்பட்டிருப்பின்], அந்த எதிரி நாட்டுனான போரில் இத்தனைப் பெரும் எண்ணிக்கையிலான உயிர்களை இழக்க நேரிட்டிருந்தால் அது, நாட்டின் தன்மானம் காப்பதற்காக என்று நியாயம் கற்பிக்கலாம்.
ஆனால், ரஷ்யா 310,650 உயிர்களை இழந்தது புடினின் பிடிவாதத்தாலும், வறட்டுக் கௌரத்தாலும், முட்டாள்தனத்தாலும்தான்.
இவரின் தலைமையை எதிர்த்து ரஷ்யர்கள் கிளர்ந்தெழாமல் இருப்பது புரியாத புதிராகவும், ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்துவதாகவும் உள்ளது!
* * * * *
https://www.dagens.com/ தளத்தில் வெளியான அறியத்தக்கக் கூடுதல் செய்திகள்:
//‘உக்ரைன் போரில் ரஷ்யா தனது கொடிய நாட்களில் ஒன்றை அனுபவிக்கிறது’ -கியேவ் அறிக்கைகள்.
நியூஸ்வீக்கின்படி, உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்தே ரஷ்யப் படைகள் பெரும் இழப்புகளைச் சந்திக்கலாயின.
உக்ரேனின் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் தொழில்துறை மையமாகவும் உக்ரேனிய எதிர்ப்பின் அடையாளமாகவும் விளங்கும் அவ்திவ்காவைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் தொடக்கத்தில் இருந்து விளாடிமிர் புட்டினின் படைகளுக்கு உயிரிழப்புகளும் மற்றும் உபகரண இழப்புகளும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா முந்தைய நாளில் மட்டும் 1,130 வீரர்களை இழந்துள்ளது; 20 மாத மோதலில் அது 310,650 ஆக உயர்ந்துள்ளது//
முக்கியக் குறிப்பு: ஒரு வல்லரசின் அதிபரான புதினை விமர்சிப்பதற்கான தகுதி உனக்கு[‘பசிபரமசிவம்] உள்ளதா என்று எவரும் கேள்வி எழுப்ப வேண்டாம்.
ஒரு முட்டாள் இன்னொரு முட்டாளை விமர்சிக்கத் தகுதி எதுவும் தேவையில்லை!
ஹி...ஹி...ஹி!!!