அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 13 நவம்பர், 2023

இந்துமதத்தைப் பாதுகாக்க உ.நீதிமன்றத்தில் மனு! பாவம் ‘பாஜக’!!

‘அவன்’ தன் உயிருக்குப் பகைவர்களால் ஆபத்து நேரலாம் என்று அஞ்சுகிறான். அவர்களை எதிர்கொள்ளும் வழி அறியாத அவன் தன் நாட்டு ஆட்சியாளரிடம் தனக்குப் பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை வைக்கிறான்.

ஆட்சியாளர்கள்[மத்திய&மாநில அரசுகள்] கண்டுகொள்ளவில்லை.

வேறு வழியில்லாமல் அவன் உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறான்.

“என் உயிருக்குப் பாதுகாப்பு வழங்கும்படி ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்னும் கோரிக்கை மனுவைச் சமர்ப்பிக்கிறான்.

இவனின் கோரிக்கையில் நியாயம் இருப்பதால், உச்ச நீதிமன்றம் இது குறித்து ஆட்சியாளரிடம் விளக்கம் கேட்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் என்று நம்பலாம்[நிகழ்ச்சி கற்பிக்கப்பட்டது].

இது தனி நபர் நலன் குறித்த வழக்கு.

இதனையொத்த ஒரு பொதுநல வழக்கு சில நாட்களுக்கு முன்பு[11.11.2023] உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

‘இந்தியாவில் இந்துமதத்தைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல் நெறிகளை வகுத்திட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்னும் கோரிக்கை அதில் முன்வைக்கப்பட்டிருந்தது.

தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, மனுதாரரின் பித்துக்குளித்தனத்தை எண்ணி நீதியரசர்கள் குறைந்தபட்சம் மனதுக்குள் நகைத்தார்களோ அல்லவோ நமக்கு வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றுகிறது.

இந்தியாவின் மதம்[இது மதச் சார்பற்ற நாடு என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தை] இந்துமதம்; ஆளும் ‘பாஜக’ ஆட்சியாளர்கள் தம் உயிரினும் மேலாக நேசிக்கும் மதம்.

இந்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனுவைச் சுமந்து உச்ச நீதிமன்றம்வரை ஒருவர் சென்றிருப்பது வேடிக்கையானது.

இதையே இங்குள்ள சிறுபான்மை மதத்தவர்கள் செய்திருந்தால் அது இயல்பான ஒன்றாக இருந்திருக்கும்.

சிறுபான்மையோ பெரும்பான்மையோ, இந்து மதமோ, இஸ்லாமோ, கிறித்தவமோ எந்தவொரு மதமாயினும் அது பாதுகாக்கப்படுதல் வேண்டும் என்பது விரும்பத்தக்கதல்ல.

மதங்கள் உருவான/வளர்ச்சியடைந்த காலக்கட்டங்களில் எப்படியோ, இந்த இருபதாம் நூற்றாண்டில் இவற்றால் மனித இனத்துக்கு விளையும் நன்மைகளைவிடவும் தீமைகளே அதிகம்.

எனவே, மதங்கள் அனைத்தும் அழிக்கப்படுவதற்கான வழிவகைகளை ஆராய்வது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிடுவது வரவேற்கத்தக்கதாகும்.

அவ்வாறான உத்தரவைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கில்/பல்லாயிரக்கணக்கில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதற்கான மனப்பக்குவத்தை நம் மக்கள் விரைவில் பெறுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்தத் தீர்ப்பு கீழே: