செவ்வாய், 14 நவம்பர், 2023

ஸ்வீடனில் ‘குர்ஆன்’ எரிக்கப்பட்டதை அல்லாஹ் தடுக்காதது ஏன்?!

"அல்லாஹ் மிகவும் சக்திவாய்ந்தவன் என்றால், ஸ்வீடனில் முன்னாள் இஸ்லாமியரால் குரான் எரிக்கப்படுவதை[பட்டதை] ஏன் தடுக்கவில்லை? புனிதமாகக் கருதப்படும் ஒன்றை ஒருவர் எப்படி எரித்துச் சாம்பலாக்க முடியும்?”

-இவை 'கோரா’வில்[Quora.com] எழுப்பப்பட்ட கேள்விகள்.


இக்கேள்விகளுக்கு, Maha Rizma[Ph.D] என்பவர் பதிலளித்துள்ளார்.


அவரின் பதில்:


//கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பரிசுத்தமானவர் என்று கருதுகிறார்கள், ஆனால் பிதா[கர்த்தர்>கடவுள்] அவரைச் சிலுவையில் அறைய அனுமதித்ததாக அவர்கள் நம்புகிறார்கள். இந்துக்களும் உடையக்கூடிய சிலைகளை[பிள்ளையார்] உருவாக்கி, சில சமயங்களில் அவற்றை அழித்துவிடுவார்கள். அவை போலத்தான் குரான் எரிக்கப்பட்டு அழிந்துபோவதும். 


புனிதம் என்றால் அழியாதது என்று அர்த்தமல்ல. நெருப்பு வைத்தால் அழிந்துதான் போகும். ‘அழியாதது’[பரிசுத்தம்] என்பது அல்லா என்னும் கடவுளுக்கு மட்டுமே பொருந்தும்.


குரானை அழித்தல் என்னும் விருப்பத்தை நிறைவேற்ற அவரே அனுமதிக்கிறார். அவர் சர்வ வல்லமையுடையவர் என்பதற்கும் இந்த அழிப்பு வேலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை[???].


குரான் ஒரு புத்தகம் மட்டுமே தவிர, அதை எரித்து அழிப்பது குறித்து விவாதிக்க ஏதுமில்லை என்பதாக விளக்கவுரை நல்கியிருக்கிறார் Maha Rizma.


எனினும், குரான் என்னும் புத்தகத்தை அழிக்கலாமே தவிர, குரானை[அதில் உள்ள வாசகங்களை]ப் பாராயணம் செய்வதை அழிக்க முடியாது என்றும் சொல்லியிருக்கிறார் அவர்//


இங்கே நாம் குறிப்பிட விரும்புவது.....


பாராயணம் செய்பவனை அழித்துவிட்டால் பாராயணம் செய்வது சாத்தியம் இல்லாமல்போகும்[எனவே, பாராயணம் செய்வதை அழிக்க முடியாது என்பது தவறு] என்பதே.


பாராயணம் செய்வது தடைபடாமலிருக்க, பாராயணம் செய்பவனை அழிவிலிருந்து காப்பது அல்லாஹ் என்னும் கடவுளின் கடமை.


ஆனால்,


குரான் புத்தகம் எரிக்கப்படுவதைத் தடுத்தாட்கொள்ளாத அவர், பாராயணம் செய்பவன் அழிக்கப்படுவதை[எரித்தோ வேறு முறைகளைக் கையாண்டோ]த் தடுப்பார் என்பது என்ன நிச்சயம்?


எல்லாம் வல்ல அல்லாவுக்கே வெளிச்சம்!


* * * * *

அவசியம் அறியத்தக்கக் குறிப்பு:


அல்லாவோ, ராமனோ, அனுமானோ, அய்யப்பனோ, ஏசுவோ, பிதாவோ கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இவர்களையோ இவர்களைப் போன்ற சாமிகளையோ[கற்பனையாயினும்] தொழுவது அவரவர் உரிமை. அதைத் தடுத்திட எவருக்கும் உரிமை இல்லை. ஆனால், அந்தக் கடவுள்களின் பெயரால் புனிதம், பாராயணம், புண்ணியம் என்று எதையெதையோ சொல்லி மக்களை மதிமயங்கச் செய்பவர்களை விமர்சிப்பது பகுத்தறிவு போற்றுவோருக்கு உள்ள உரிமை மட்டுமல்ல, கடமையும் ஆகும்.

* * * * *

 Maha Rizma

 · 
Follow

Well, Christians consider Jesus to be holy, but still, they believe the Father allowed him to be nailed and crucified. Hindus also make idols which are fragile and sometimes they destroy them (Durga immersion). So the believers understand holiness differently than the way you understand it as an atheist. Atheists focus on the physical characteristics of a holy object while believers focus on the transcended reality attached to it.

Muslims understand the original Quran as a recitation. The word “Quran” itself means recitation. You cannot burn a recitation. The printed book is called Mushaf. Muslims also burn Mushaf, whenever needed. No materialistic thing is considered too holy to not perish. Even Ka’ba is broken and rebuilt by Muslims several times.

Everything is bound to perish, except God’s [eternal] self (Quran 28:88)

In one word, holy doesn’t mean if you put fire it will not burn or if you use a bulldozer it will not be broken. Holy doesn’t mean “indestructible”. That kind of holiness is applicable only for God. For other things, God allows you to exercise your free will to destroy anything holy. God allowing you to exercise your free will has nothing to do with his omnipotence.