நம்மைத் தாக்கும் மிக முக்கிய நோய்களும், அவற்றிற்கான அறிகுறிகளும் குறித்த விரிவான பட்டியல்[மருத்துவ இதழில் வெளியான ‘படங்கள்&நோய்கள்&அறிகுறிகள்’ தொகுப்பின் நகல் பதிவு கீழே]:
*நெஞ்சில் பரவலான வலி: மாரடைப்பு.
*எதிர்பாராத மூச்சுத் திணறல்: மாரடைப்பு, இதயம் பலவீனமடைதல், சளி, ஒவ்வாமை[அலர்ஜி].
*திடீர் மனக்குழப்பம்: தொற்றுநோய்ப் பாதிப்பு, பக்கவாதம், மாரடைப்பு, எலும்பு முறிவு, சிறுநீர் அடைப்பு.
*அதிக அளவில் வியர்ப்பது: மாரடைப்பு, ரத்த அழுத்தம் குறைதல், சர்க்கரை அளவு குறைதல்.
*அதிகப்படியான வாந்தியும் பேதியும்: வயிற்றில் தொற்று நோய்.
*வாய் குளறுதல், நடப்பதில் சிரமம்: பக்கவாதம்.
*தொடர்ந்து சிறுநீர் வெளியேறாத நிலை: சிறுநீர்ப்பை & சிறுநீர்த் தாரையில் பிரச்சினை.
*ரத்த வாந்தி: வயிற்றில் ரத்தக்கசிவு.
*மயக்கம், தலை சுற்றல்: உயர் ரத்த அழுத்தம், கழுத்து எலும்பில் தேய்வு, மூளையில் கட்டி, பக்கவாதம்.
*தோலில் தோன்றும் சிவப்பு நிறம், தோல் அரிப்பு: அலர்ஜி, தொற்றுநோய் அறிகுறி.
* * * * *
நன்றி: ‘முதுமை என்னும் பூங்காற்று’[மருத்துவ இதழ்], நவம்பர் 2023.