சனி, 18 நவம்பர், 2023

‘ஒன்றே ஒன்று’ என்று எதுவும் இல்லை, கடவுள் உட்பட!!!

ல்லை[விளிம்பு] காண இயலாத அளவுக்கு விரிந்து பரந்து கிடக்கும் அண்டவெளியில் ஒரு சூரியன் இருப்பது நமக்குத் தெரியும். இன்னும் எத்தனைச் சூரியன்கள் உள்ளன என்பது விஞ்ஞானிகள், ஞானிகள் என்று எவருக்கும் தெரியாது. தெரிந்துகொள்வதும் இயலவே இயலாது. ஆகையினால், ‘சூரியன் ஒன்றே’ என்று சொல்வது தவறு.

இதைப் போலவே, விண்வெளியிலுள்ள கோள்களும் நட்சத்திரங்களும் பிறவும் எண்ணி முடிக்கப்படாத மிக மிக மிகப் பலவாக உள்ளனவே அன்றி, எந்த ஒன்றிலும்[இனத்திலும்?] ‘ஒன்று’ மட்டுமே உள்ளது என்று உறுதிபடச் சொல்வது ஒருபோதும் சாத்தியமாகாதது.

மேலும்.....

“ஒன்று... இரண்டு... மூன்று” என்னும் எண்ணுதல் முறைமையைக் கண்டறிந்தவன் மனிதன்[மனிதன் தோன்றுவதற்கு முன்பு ‘எண்ணுதல்’ என்பது இல்லை]. இதற்கு அவனுக்கு வாய்த்த ஆறறிவு பயன்பட்டது.

இந்த எண்ணுதலுக்கு வரையறை என்பதும் இல்லை[“ஒன்று... இரண்டு... நூறு... ஆயிரம், பல்லாயிரம்... லட்சம்... கோடி... கோடி... கோடி... கோடி...” என்று கால வரையறை இன்றித் தொடர்ந்து எண்ணிக்கொண்டே போகலாம்[முற்றுப்பெறுதலே இல்லை].

இதன் மூலம் நாம் அறியத்தக்கது.....

“ஒன்றே ஒன்று” என்று அறுதியிட்டுச் சொல்லும் வகையில் எப்பொருளும்[இனமும்] இல்லை என்பதே.

இந்நிலையில், மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட கடவுளை மட்டும், “அவர் ஒருவரே” என்று சொல்வது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல; அறிவுடைமையும் அல்ல[ஒருவரா, பலரா என்னும் கேள்விக்குத் “தெரியாது” என்று சொல்வதே ஏற்புடையதாகும்].

எனவே, 

மதவாதிகள் தங்களுக்கென்று[ஆளாளுக்கு] ஒரு கடவுளைக் கற்பித்துக்கொண்டு, “கடவுள் ஒருவரே. அந்த ஒருவர் எங்கள் கடவுளே. அவரே வணங்கத்தக்கவர்” என்று சொல்லித் திரிவது, தங்களை மூடர்கள் என்று அடையாளப்படுத்துவதோடு, கேட்பவர்களையும் கேனயர்கள் ஆக்கும் இழிசெயல் ஆகும்!


தொடர்புடைய இடுகை:


        *   *   *   *   *   *

*** போதிய அறிவியல் புரிதலின்றி, மிகை ஆர்வம் காரணமாக, வாசிப்பாளரைச் சிந்திக்கத் தூண்டும் நோக்குடன் எழுதப்பட்ட பதிவு இது. “தவறு காணின் அலட்சியப்படுத்துக” என்பது என் வேண்டுகோள்!