அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 19 நவம்பர், 2023

குறைவாக நீர் அருந்துதலும் வாழ்நாள் 20% பறிபோதலும்!

ல்ல உடல்நலத்துடன் வாழ நீர்ச்சத்து[நீரேற்றம்>The word or phrase hydrated refers to containing combined water(especially water of crystallization as in a hydrate] அவசியம்.

The Lancetஎன்பது ஒரு மருத்துவ இதழ்.

45 - 66 & 70 - 90 வயதானவர்களின் தண்ணீர் பருகும் பழக்கத்தை 25 ஆண்டுகள் பகுப்பாய்வு செய்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையை அண்மையில் அது வெளியிட்டது.

போதுமான நீரேற்றம் இல்லாத முதியவர்கள் அகால மரணம் அடைவதற்கு வாய்ப்புள்ளது என்கிறது அந்த ஆய்வறிக்கை{அறிக்கையின்படி, 11,000 பங்கேற்பாளர்களின் நீரேற்றம் நிலையான வரம்பிற்குள் இருந்தது[அவர்களின் இரத்த-சோடியம் செறிவுகள் லிட்டருக்கு 135 முதல் 146 மில்லிமோல்கள்[அலகு]வரை இருந்தன. 146க்கு மேல் இருந்தால், நீர்ச்சத்து[நீரேற்றம்] குறையும் அதாவது நீரிழப்பு அதிகமாகும்}.

மேலும்,

நீர்ச்சத்து மிகுந்த சருமம்[தோல்] பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும். தினசரி போதுமான நீர் அருந்தாவிட்டால் சருமம் வறண்டு, செதிலடைந்து எரிச்சல் ஏற்படும். போதுமான நீரின்மை தோல் சுருக்கத்தையும், வயதான தோற்றத்தையும் எளிதில் உருவாக்கிவிடும்; கண்களில் குழி விழும்.

நீர்ச்சத்து குறைந்தால், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றின் அளவுகள் அதிகரிக்கும்; நீரிழிவு, இதயச் செயலிழப்பு மற்றும் டிமென்ஷியா போன்ற கொடிய நோய்கள் உருவாகும் வாய்ப்பும் அதிகம்.

எனவே, போதுமான நீர் அருந்துதல் மிக அவசியம்.

‘யுஎஸ் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ், இன்ஜினியரிங் & மெடிசின்’, ஒரு நாளைக்கு எட்டு தம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது என்கிறது[வெள்ளரி, தர்ப்பூசணி, அன்னாசி, தக்காளி போன்றவற்றின் மூலம் அதிக நீர்ச்சத்தைப் பெறலாம்].

ஆக,

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது திடீர் மரணத்திற்கான வாய்ப்பை 20% அதிகரிக்கிறது என்பது அறியத்தக்கது.[You should drink plenty of fluids such as water, diluted squash and fruit juice to stay hydrated. The key is to drink regularly throughout the day (at least 6-8 mugs). If you're active, or if the weather is particularly hot, there's a greater risk that you will become dehydrated].

                                     *   *   *   *   *

Not drinking enough water increases your risk of death by 20%, study finds (msn.com)