“தி.மு.க ஏன் தோற்க வேண்டும்?” என்பது ‘கோரா’[Quora]வில் கேட்கப்பட்ட கேள்வி[ta.quora.com]
//தோற்றால்தான், அங்கே வேலைவெட்டி இல்லாமல், வட மாநிலங்களில் இருந்து வடவர்கள் ரயிலில் பெட்டி பெட்டியாய்த் தமிழகத்திற்கு வேலைவாய்ப்புத் தேடி வருவதுபோல, தமிழ்நாட்டிலும் படிப்படியாய் வேலை வாய்ப்புகள் குறைந்து, தமிழர்களும் பெட்டி பெட்டியாய் ரயிலேறி வட மாநிலங்களுக்குச்[வேலை கிடைக்கிறதோ இல்லையோ] செல்லலாம்.
தோற்றால்தான், இதுவரை வட இந்தியாவிலிருந்து blue collar வேலைகளுக்காக லட்சக்கணக்கில் தமிழகத்திற்குக் குடிபெயர்ந்துள்ள வட இந்தியர்களுக்கு அடிமை வேலை செய்ய முடியும்.
தோற்றால்தான், ஏதோ சிறிதளவேனும் இருந்துகொண்டிருக்கும் சமத்துவம், பகுத்தறிவு, உயரிய பண்பாடு எல்லாம் சீரழிந்து, மேல்தட்டு வர்க்கத்தினர் இன்னும் அதிகமாகக் கோலோச்ச முடியும்.
தோற்றால்தான், சிறுபான்மையினர் இன்னும் அதிக அளவிலான பயத்திலும் பதட்டத்திலும் இருக்க முடியும்.
தோற்றால்தான், பா.ஜ.க, தமிழகத்தில் அது வேரூன்றி வளரத் தடையாக இருக்கும் தமிழரின் மொழி&இன உணர்வுகளைச் சிதைத்து, இந்தித் திணிப்பு, ஒரே தேசம், ஒரே இனம், ஒரே மொழி என்று ரோடு ரோலர் போட்டு அனைத்தையும் “சமப்படுத்த”லாம்.
இப்படி இன்னும் நிறையக் காரணங்களைச் சொல்லலாம் தி.மு.க தோற்கவேண்டும் என்பதற்கு.
திருப்திதானே?!//