‘யூடியூப்’இல் இடம்பெற்றிருக்கும் மேற்கண்ட காணொலி நேற்று[07.11.2023] என் பார்வையில் பட்டபோது, 'முஸ்லிம் நாடுகள்[பெரும்பாலானவை] ஏழ்மையில் சிக்குண்டிருப்பது ஏன்?[Why Are Muslim Countries Poorer?] என்னும் அதன் தலைப்பு என்னை வெகுவாக ஈர்த்தது.
காரணங்களை அறியும் ஆர்வத்துடன் காணொலியை இயக்கிச் செவிமடுத்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், காணொலி உரையை முழுமையாகப் புரிந்துகொள்வது[குறிப்பாகப் பேச்சாளரின் உச்சரிப்பு] எளிதாக இல்லை.
அது புரியவில்லையாயினும், இஸ்லாம் நாடுகளின் ஏழ்மை நிலை பற்றிச் சிந்தித்ததில் கீழ்க்காண்பவை காரணிகளாக இருத்தல்கூடும் என்று தோன்றியது.
அவற்றுக்கான சிறு பட்டியல்:
*இறை வழிபாட்டிற்கு ஏனைய மதம் சார்ந்தவர்களைவிடவும் இஸ்லாமியர்கள் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். நாளெல்லாம் கடுமையாக உழைத்தால்தான் முன்னேற முடியும் என்னும் நிலையில், அதற்குத் தேவையான இடையறாத கடும் உழைப்புக்கு ஒரு நாளில் ஐந்து முறை வழிபடுவது(தொழுவது) இடையூறாக அமைகிறது. [எனவே, “ஐந்தை வாரத்தில் ஒரு முறை(ஞாயிறுகளில்) என்றாக்கினால் அது தவறாகுமா?”என்று கேட்கத் தோன்றுகிறது].
*தங்களின் மதத்தைப் பரப்புவதில் காட்டும் உத்வேகத்தில் கணிசமான பங்கைக்கூட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இஸ்லாமிய ஆடவர்கள்[பெரும்பாலானவர்கள்] காட்டுவதில்லை.
*தாங்கள் நிகழ்த்தும் அத்தனைச் சாதனைகளுக்கும் இறைவனைக்[எல்லாப் புகழும் இறைவனுக்கே] காரணம் ஆக்கியிருப்பது[இது தனியொரு இஸ்லாமியரின் தன்னம்பிக்கையைக் குறைக்கும் என்று சொல்லலாம்].
*மனிதர்களால் ஆவது ஒன்றுமில்லை என்றெண்ணுவது[இவர்களின் இந்த அவநம்பிக்கையே அறிவியல் முதலான பல்வேறு துறைகளிலும் இவர்கள் பின்தங்கியிருப்பதற்கான காரணம் ஆகும். இஸ்லாமியருக்கும்[ஹமாஸ்] யூதர்களுக்குமான போரில்கூட இவர்கள் அல்லாவைத் துணைக்கு அழைப்பதைப் பல காணொலிகளில் காண முடிகிறது. யூதர்கள் அதைச் செய்யவில்லை].
*இயற்கை, இறைவனின் இருப்பு, படைப்பு குறித்தெல்லாம் தங்குதடையில்லாமல் சிந்திக்கும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு. அந்த உரிமை இஸ்லாம் மதத்தில் பறிக்கப்பட்டுள்ளது[விதிவிலக்காக மிகச் சிலர் இருத்தல்கூடும்]. இந்த நடவடிக்கை சமுதாய வளர்ச்சியில் மிகுதியும் அக்கறை கொண்ட சீரிய சிந்தனையாளர்களும் சீர்திருத்தவாதிகளும் உருவாவதைத் தடுத்திருக்கிறது. இது இஸ்லாம் சமூகத்தவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக மக்களுக்குமான பேரிழப்பாகும்.[இவர்கள் இல்லாமல் தங்களின் சமுதாயம் முன்னேறுவது சாத்தியமே இல்லை என்பதை இஸ்லாமியர்கள் எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டார்கள்].
*ஆண்களின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மகத்தானது. உரிய வகையிலெல்லாம் தங்களுக்கான பங்கைச் செலுத்த உயரிய கல்வியறிவும் பொது அறிவும் அவர்களுக்குத் தேவை. அவற்றை அவர்கள் பெற்றிட இயலாத வகையில், இஸ்லாமிய நாடுகள் பலவும் பெண்களை வீட்டோடு முடக்கிவிட்டன.
மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இஸ்லாம் நாடுகள் போதிய வளர்ச்சியைப் பெறாததற்கான காரணங்கள் மேற்கண்டவை.
* * * * *
இஸ்லாமியரின் நலன் கருதி வெளியடப்பட்டுள்ளது இந்தச் சிறிய ஆய்வு. உணர்ச்சிவசப்படாமல், குறிப்பிடப்பட்டவற்றில் சில குறைகளையேனும் அவர்கள் களைந்திட முயல்வார்கள் என்பது நம் நம்பிக்கை.
“இஸ்லாம் வாழ்க” என்று சொல்வதில் நமக்கு நாட்டம் இல்லை! “இஸ்லாமியர் வாழ்க... வளர்க” என்று வாழ்த்துவதில் எவ்விதத் தயக்கமும் இல்லை!!