#இந்தியக் கலாச்சாரம்
அறிவியலுடன் நெருக்கமான
தொடர்பு உடையது.
விண்வெளி ஆய்விலும்,
கணிதத்திலும், நம்
முன்னோர் சிறந்து
விளங்கினர்.
பல வரலாற்றுச் சிறப்பு மிக்க
கேள்விகளுக்கு, நம்
முன்னோர் தீர்வு கண்டுள்
ளனர். பூஜ்ஜியத்தைப்
பற்றிப் பேசும்போது, உலகம்
முழுவதும் இந்தியா
வைப் பற்றிப் பேசும்.
விண்வெளி ஆய்வுத் திட்டங்
களில், இந்தியாவில் சமீபத்
தில் சீர்திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம், கல்வி மற்றும்
தொழில் துறைகளில்,
வேலை வாய்ப்புகள்
அதிகரிக்கும்.
அறிவியல் ஆராய்ச்சியை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது# [https://m.dinamalar.com/paytm/kmalardetail.php?id=49533]
இப்படியாக, இன்னும் எப்படியாகவெல்லாமோ, அறிவியல் துறையில் இந்தியா நிகழ்த்திய... நிகழ்த்தும் சாதனைகள் பற்றி வாய்ப்பு அமையும்போதெல்லாம் கதை கதையாய்ச் சொல்லியிருக்கிறார் நம் பெருமதிப்பிற்குரிய பிரதமர் மோடி.
மோடியின் ஆசீர்வாதத்துடன், விண்வெளி ஆய்வில் அயல் நாட்டார் பொறாமைப்படும் அளவுக்கு நம் விஞ்ஞானிகள் பல வெற்றிகளை ஈட்டியுள்ளார்கள்.
அறிவியல் துறையில் நாம் அடைந்திருக்கும் அசாத்திய வளர்ச்சியை நினைந்து பெருமிதத்தில் மிதக்கும் அதே வேளையில்.....
கற்பழிப்பு, சிறுமிகளை வன்புணர்தல், கடத்தல் என்று பல கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு, காவல்துறையினரின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி[இன்னும் தூவிக்கொண்டிருக்கிறான்], உலகின் எங்கோ ஓரிடத்தில் ஒளிந்து மறைந்து வாழ்கிறான் நித்தியானந்தா என்னும் போலிச் சாமியார்.
இவன் ஓடி ஒளிந்த ஆண்டு 2019.
‘கைலாசா’ என்னும் நாட்டை உருவாக்கியது, ஐ.நா. சபைக்குத் தன் பிரதிநிதியை அனுப்பியது, அவ்வப்போது முழுமுதல் கடவுள் போல ஒப்பனை செய்துகொள்வது, காணொலிகள் வாயிலாக அருளாசிகள் வழங்குவது என்று இவன் செய்யும் அழும்புகள் சொல்லி மாளாது. தனக்கென வலைத்தளம் ஒன்றையும் உருவாக்கி அறிக்கைகள்[கைலாசாவின் குடியுரிமைக்கு விண்ணப்பித்தல் போன்றவை] வெளியிடுகிறான்.
ஈக்வடார் கடற்கரையில் உள்ள ஒரு தீவில் இவன்[நித்யானந்தா] இருப்பதாகப் 'பிபிசி' அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த நாட்டு அரசு அதை மறுத்துள்ளது.
எப்போதோ கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய இந்தக் ‘ஜெகதலப்பிரதாபன்’ இருக்கும் இடத்தை இன்றளவும்{இன்றளவில் இந்தியா அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை விதம் விதமாகப் படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஒரு காலக்கட்டத்தில் சூரியனைக் குளிர்வித்து மண்ணுருண்டையாக்கி[அறிவியல் வளர்ச்சியில் இதுவும் சாத்தியமே] அதில் நம் தேசியக் கொடியை வெற்றிகரமாக நட்டுவிட்டுத் திரும்பும்] கண்டுபிடிக்கவில்லை; அதற்கான முயற்சி எந்த அளவுக்கு மேற்கொள்ளப்பட்டது என்பதும் அறியப்படவில்லை.
நாட்டை ஆளும் மிகு அதிகாரம் படைத்தவர்கள், முறையான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டால், இந்த நபரைக் கண்டுபிடித்துக் கைது செய்வது சாத்தியம்தான்.
ஈடுபடுவதாகத் தெரியவில்லை.
ஏன்?
நாட்டில் மூடர்கள் அதிகமாக இருந்தால்தான் ‘அவர்கள்’ஆல் தேர்தல்களில் வெற்றிபெற முடியும் என்று நினைக்கிறார்களா?
மூடர்களின் எண்ணிக்கையைத் தக்கவைக்கவும், மேலும் அதிகரிக்கவும் ஜக்கி வாசுதேவ், அமிர்தானந்த மயி, பாபா ராம்தேவ், ரவிசங்கர், கல்கி போன்ற கோடீஸ்வரப் போலிச் சாமியார்கள் தேவைப்படுகிறார்களா?
கோடிச் சாமியார்களில் ‘கேடி’ச் சாமியார் நித்தியானந்தாவும் ஒருவன் என்பதால் அந்த நபரைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களோ?
யாரறிவார் இந்த ரகசியத்தை?!