கேள்வி[’கோரா’]:
பதில்:
//ஈஷாவுக்குப் போகாதீர்!
அதற்குப் பதில், ‘பேரூர் பச்சைநாயகி உடனாகிய பட்டீச்சரமுடையாரை’த் தரிசனம் செய்து, அங்கு ஆடி முடித்துக் காலைக் கீழே வைக்கும் நிலையில் நின்றுள்ள ‘மேலைச் சிதம்பர நடராஜரை’த் தரிசனம் செய்து முக்தியைத் தேடுங்கள். அடுத்த முறை சிவராத்திரிக்கு இதை நோட்டீஸில் அச்சிட்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தரப்போகிறேன்.
ஜக்கி வாசுதேவ் எல்லாம் இப்படிச் சொல்லலாமா?
எதன் அடிப்படையில் ’தியான லிங்கம்’ கோவில் உருவாக்கப்பட்டது?
எதன் அடிப்படையில் லிங்க பைரவி என்கிற பெயரில் முட்டாள் தனமாகச் சிலை நிறுவப்பட்டது?
எதன் அடிப்படையில் ‘நாகப் பிரதிஷ்டை’ என்கிற பெயரில் மூடத்தனமாக நாக சிலை வைக்கப்பட்டது?
ஓதப்படும் திருமுறை எது??
எந்த ஆகமத்தின் அடிப்படையில் ஜக்கியின் ‘private Resort- ஈஷா யோகா பவுண்டேசன்’ கட்டப்பட்டது?
எந்த ஆகமத்தில் கூறப்பட்டபடி[சிகை அலங்காரம் உட்பட] ஆதியோகி சிலை நிறுவப்பட்டது?
இவனைப் போன்றோரை மக்கள் அடித்துத் துரத்த வேண்டும்.//
* * * * *
நன்றி: ta.quora.com