‘பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை’
மிகப் பல ஆண்டுகளாக, மிகப் பல விஞ்ஞானிகள் அயராது ஆய்வுகள் நிகழ்த்திக் கண்டறிந்த உண்மை இது.
இந்தக் கண்டறிதலால் அவர்கள் திருப்தி அடைந்துவிடவில்லை.
அணுவுக்குள்[பிறிதொரு பிரபஞ்சமே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது] என்ன இருக்கிறது என்று சோதிக்கும் முயற்சி தொடர்கிறது.
‘மூல அணு என்று ஒன்று[ஒன்று என்பது முடிந்த முடிவல்ல] உள்ளதா?’ என்பது பற்றியும் அண்மைக் காலங்களில் ஆய்வுகள் நிகழ்த்தியுள்ளார்கள்[அந்த மூல அணுவுக்குக் ‘கடவுள் அணு’ என்று பெயரிட்டுத் தாங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் கடவுளை நிரூபிக்க பக்தக் கோடிகள் முயன்றது தனிக் கதை] அவர்கள். அவை தொடர்பான ஆய்வுகள் முற்றுப்பெறாதவை.
எனவே, அணு குறித்த ஆய்வுகள் தொடரும் என்பது அறியத்தக்கது.
தொடரும் ஆராய்ச்சிகளால், அணுவுக்குள் என்ன உள்ளது[என்னவெல்லாம் உள்ளன] என்று கண்டறிந்து சொல்வது சாத்தியப்படலாம்.
ஆயினும், அத்துடன் ஆய்வுகள் முற்றுப்பெற்றுவிடா.
அணுவுக்குள் உள்ள அந்த ஒன்றின்[பலவற்றின்] உள்ளடக்கமாக[தோற்றத்திற்குக் காரணமானது/காரணமானவை] இருப்பது எது/எவை என்று ஆராய்வது தவிர்க்க இயலாததாகவே இருக்கும்.
ஆக,
பொருள்கள்[+உயிர்களும் பிறவும்] உருவான விதம் பற்றிய ஆய்வுகள் மனித இனம் உள்ளளவும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.
என்றேனும் ஒரு நாள், உள் உள் உள் உள்ளடக்கத்தின் உள்ளடக்கமாகக் கடவுள் உள்ளாரா[இன்னும் தெளிவாகச் சொல்ல இயலவில்லை] என்று ஆராய்வதும் நிகழக்கூடும்.
அதன் விளைவாக, கடவுள் என்றொருவரின் ‘இருப்பு’ நிரூபிக்கப்படும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே கடவுள்[கடவுள்கள்?] என்பவருக்குக் கோயில்/கள் கட்டி, விழாக்கள் நடத்திக் கூத்தடிப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம்.
ஆனால், அறிவியல் ஆய்வுகளின் நோக்கம் உண்மைகளைக் கண்டறிவதுதானே தவிர கற்பனைகளுக்கு ஆதாரம் தேடுவதல்ல.
எனவே,
அச்சம் காரணமாக, ஆளாளுக்கு ஒன்று பல என்று கடவுள்களைக் கற்பித்து வைத்துக்கொண்டு, அந்த அவரை/அவர்களை அணுவுக்குள்ளும், தூணுக்குள்ளும், துரும்புக்குள்ளும் இருப்பதாகக் கதையடிப்பதால் மனித இனத்துக்கு எந்தவொரு பயனும் இல்லை. தீமைகளே விளையும் என்பது உறுதி.
எனவே.....
“காணும் பொருளிலெல்லாம் கடவுளைத் திணிக்காதே” என்று ஆன்மிக அடாவடியர்களைப் பார்த்துக் கூச்சலிடத் தோன்றுகிறது!