பிற இனத்தாரால் அவர்களின் மொழிக்குப் பங்கம் விளையுமேயானால், ‘பற்று’ வெறியாக மாறுவதும் ஏற்கத்தக்கதே.
இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ‘இந்தி’யும் ஒன்று[இதற்குப் பிற மொழியாளரால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பது கருத்தில் கொள்ளத்தக்கது].
இந்திய அரசு, இந்தி அல்லாத இந்திய மொழிகளைப் புறக்கணித்து, இந்தியை மட்டும் வளர்ப்பதற்கும், அதை உலகெங்கும் பரப்புவதற்கும் அதிக அளவில் பணத்தையும்[இந்தி தவிர பிற மொழி பேசும் மாநிலத்தவர்களும் செலுத்தும் வரியில்], தனக்குள்ள மிகையான அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது. இதற்குக் காரணம் இந்தி மொழிக்காரர்களின் மொழிப் பற்று ‘வெறி’யாக மாறியிருப்பதுதான்.
அதிகாரப் பலம் இல்லாததால், இவர்களின் வெறிச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தவிர, வேறு எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளன தமிழ்நாடும் பிற தெற்கு மாநிலங்களும்.
இந்தி வெறி இடையறாது வளர்க்கப்பட்டதன் விளைவுதான், நடுவணரசு நிர்வகிக்கும், வங்கிகள், அஞ்சலகங்கள், ரயில் நிலைய அலுவலகங்கள் போன்றவற்றில் தொடரும் இந்தித் திணிப்பு[‘இந்தி’யர் திணிப்பும்தான்] நடவடிக்கை.
வரன்முறைக்கு உட்படாத அதிகாரம் தமக்கு இருப்பதால், ஒன்றிய அரசினரின் ‘இந்தி வெறி’ இப்போது உச்சநிலையைத் தொட்டிருக்கிறது.
அதற்கான அடையாளங்களில் ஒன்று.....
இந்திய தண்டனைச் சட்டம்[1860], குற்றவியல் நடைமுறைச் சட்டம்(1898),[1973] மற்றும் இந்திய சாட்சியச் சட்டம்[1872] பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா என்று பெயர் மாற்றப்பட்டு[வாயில் நுழையாத, புரியவே புரியாத மொழியில்> சமஸ்கிருதம்&இந்தி?] அவற்றிற்கான சட்ட மசோதாக்களும் மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருப்பது.
[இந்த 3 மசோதாக்களையும் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 12ஆம் தேதி அறிமுகம் செய்தார். இதன் மீதான விவாதம் மக்களவையில் கடந்த வாரம் நடந்தது. தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த 3 புதிய குற்றவியல் தடுப்புச் சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று[26.12.2023] ஒப்புதல் அளித்துள்ளார்].
இந்நிலையில் ஒருமித்த இந்தியாவின் நலம் நாடும் நல்லோர்கள் செய்யும் ஓர் எச்சரிக்கை:
“பற்று தேவைதான். அப்பற்று வெறியாகி உச்சத்தைத் தொட்டால் அழிவு நிச்சயம்”
* * * * *