மகாசமாதி என்பது ஆதாரமற்ற பொய்யுரை என்பதோடு, அந்த அம்மையார் ‘மகா சமாதி’ ஆக வாய்ப்பே இல்லை என்பதை உரிய ஆதாரங்களுடன் பலர் எழுதியும் பேசியும் இருக்கிறார்கள்.
இதன் பின்னரும் இந்த ஆளின் மீது கொலை வழக்கு ஏதும் இந்நாள்வரை பதியப்படவில்லை[முன்பு போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்தது தனிக்கதை] என்பது புரியாத புதிர்.
விஜி ‘மகா சமாதி’ ஆனது உண்மை என்றால், அது உண்மை என்பதை நிரூபிப்பது இந்த வேடதாரியின் கடமை.
அதற்கான வாய்ப்பு அமைந்தபோது, அதாவது, “மஹா சமாதி என்றால் என்ன? யோகிகள் மஹா சமாதியின்போது தங்கள் உடலை விட்டுச் சென்றுவிடுவார்கள் என்று பல கதைகள் கேட்டிருக்கிறேன். உண்மையா?” என்று கேள்விகள் எழுப்பப்பட்டபோது, இந்தப் புளுகன்ர் அளித்த பதில்[இடையிடையே நமக்குள் எழுந்த சந்தேகங்கள்>???]:
//பல யோகிகள், ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் உடலை விட்டுச் செல்வதாக முன்கூட்டியே அறிவித்துவிடுவார்கள். அதே போல், அவர்கள் குறிப்பிட்ட நாளில், அந்த நேரத்தில், மற்றவர்கள் முன்னிலையில் உட்கார்ந்த நிலையிலேயே உடலை விட்டுச் சென்றுவிடுவார்கள். இது போல், நினைத்த மாத்திரத்தில், உடலைக் காயப்படுத்தாமல் வெளியேறுவது என்பது, சாதாரண விஷயம் அல்ல. ஆனாலும், உங்கள் உடலோடு நீங்கள் எங்கு பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அறிந்திருந்தால், நீங்களும் உங்கள் விருப்பம் போல் அந்த இணைப்பைத் துண்டித்து விடலாம்.....\\
???நம் உடலோடு நாம் எங்கேயோ பிணைக்கப்பட்டிருக்கிறோமாம்! இது என்ன புதுக் கதை? தன்னுடைய உடல் எங்கே இணக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரண்டப் புளுகன்ர் சொன்னதுண்டா?
//அவர்கள் இறப்பதில்லை. அவர்கள் உடலைத் துறந்து சென்றுவிடுகிறார்கள். உதாரணமாக, ஒருவர் தன் உடலை உகுத்துவிட்டுச் செல்லப்போவதாக முன்பே அறிவித்திருந்தார். நூற்றுக்கணக்கான மக்கள் இதைப் பார்க்கக் கூடியிருந்தனர். அவர்கள் முன்னிலையில் அவர் உட்கார்ந்தவாறு சொன்னார், “நான் இப்போது போகிறேன்” என்று. சொன்ன உடனேயே, அவர் அப்படியே போய்விட்டார். அவரை யாரும் கத்தியால் குத்தவில்லை, அவர் விஷமேதும் குடிக்கவில்லை, சும்மா வெறுமனே! உட்கார்ந்திருந்த நிலையிலேயே அவர் தன் உடலை நீத்துச் சென்றுவிட்டார்.//
???நான் போகிறேன் என்று சொன்னவுடனே போய்விட்டாராம். இப்படிச் சொல்லிக்கொண்டே செத்துப்போனவர்களுக்கு[நோய்நொடி இல்லாமலும், மூச்சை அடக்காமலும் அடக்கப்படாமலும்] உரிய ஆதாரங்களுடன் ஒரு பட்டியல் தரமுடியுமா இந்தப் பச்சைப் பொய்யனாரால்?
அவர்கள் இறப்பதில்லையாம். இறப்பதில்லை என்றால் உடல் இயக்கமின்றி அழுகி நாறாமல் கிடப்பது எப்படி?
அப்படிக் கிடக்கும் உடம்புடன் அவர்களின் உயிர்கள் புகுந்து மீண்டும் மனிதர்களாக நடமாடினார்களா? அவர்களின் எண்ணிக்கை என்ன?
விஜியின் உடலைப் பத்திரப்படுத்தியிருந்தால், விரும்பும்போது அவர் தன் குழந்தைக்காகவாவது புத்துயிர் பெற்று வாழ்ந்திருப்பாரே? அந்த அம்மாவின் உடல் எரிக்கப்பட்டது ஏன்?[கேள்வி கேட்டிருக்கிறார்கள் இந்த ஆள் பதில் சொன்னதே இல்லை].
//நீங்களும் உங்கள் விருப்பம் போல் உங்களின் உடம்புக்கான இணைப்பைத் துண்டித்து விடலாம்//
???இணைக்கப்பட்டது எதனுடன், எப்போது என்னும் கேள்விகளுக்கே விடை தெரியாதபோது இணைப்பதைத் துண்டிப்பது எப்படிச் சாத்தியம்? புளுகுவதற்கு எல்லையே இல்லையா?
//இந்த இடம் வரையில் எப்படி வந்தீர்கள், உங்கள் உடலோடு நீங்கள் எங்குப் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையெல்லாம் சில யோக வழிமுறைகளைப் பின்பற்றினால் நீங்களே அறிந்து கொள்ள முடியும். இந்தப் பிணைப்பு எங்கே இருக்கிறது என்று தெரிந்தால், பக்குவமாக உங்களை நீங்களே இந்த உடலிலிருந்து கழற்றிக்கொள்ள முடியும். யாரும் உங்களை வலுக்கட்டாயமாக அனுப்பிவைக்கத் தேவையில்லை. நீங்கள் அருள் நிறைந்த மனிதராக இருக்கும்பட்சத்தில், விரும்பிய நேரத்தில் போகலாம்//
???மனசாட்சியே இல்லாமல் இப்படியெல்லாம் கதையளக்க முடிகிறதே இந்த ஆளால்? உலகிலுள்ள அத்தனைப் பேரும் முட்டாள்களா?
//மனதில் பதினொரு நிலையிலான பரிமாணங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று அடக்கமாய் ஒரே இடத்திலேயே இருக்கின்றன. “எங்கே” என்று கேட்கும்போது நீங்கள் எப்போதும், தூரம், சென்றடையும் இடம் போன்றவற்றைப் பற்றியே பேசுகிறீர்கள். நிதர்சனத்தில் 'இங்கு', 'அங்கு' என்று எதுவும் இல்லை. 'அப்போது', 'இப்போது' என்றும்கூட எதுவும் கிடையாது//
???புரியவே புரியாத விளக்கவுரை. இந்த விளக்கத்திற்கும் கேட்கப்பட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?
கீழ்வரும் விளக்கங்களும் இது போன்றவைதான். கேள்வி கேட்பவரைக் குழப்பத்தில் ஆழ்த்தி, அதற்கு மேலும் கேள்வி கேட்கவிடாமல் தடுக்கும் உத்தியைக் கையாள்கிறான்ர் இந்த ஆள்.
படியுங்கள்[பிழை திருத்தம் செய்யவில்லை].
//இவை அனைத்தும் உங்களுடைய மேல் மனத்தின் உருவாக்கம். மனதின் அந்த எல்லைகளைக் கடந்துவிட்டால், எல்லாமே, இங்கே இப்போது என்று ஆகிவிடும். 'இந்த இடத்திலிருந்து அந்த இடத்திற்குப் போவது' என்பதற்கு அர்த்தம் இருக்காது. இந்த இடமே எல்லாம். இது சித்தாந்தம் அல்ல. நவீன விஞ்ஞானம் இதை கோட்பாடுகளாய் இன்று வழங்கிவிட்டது. 'எல்லாம் இங்கேயே இருக்கிறது, ஒன்றுக்குள் ஒன்று அடக்கமாய் இருக்கிறது' என்கிறது.
மனதில் பதினொரு நிலையிலான பரிமாணங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று அடக்கமாய் ஒரே இடத்திலேயே இருக்கின்றன. எனவே “எங்கே” என்பது தூரத்துடன் தொடர்புடையது அல்ல. நீங்கள் உடல் சார்ந்தது என்பதிலிருந்து விலகிப் போகிறீர்கள், அவ்வளவுதான். ஐம்புலன்களின் உணர்தல் எல்லைக்குள் இருக்க மாட்டீர்கள். மனிதர்களின் கண்களுக்கு புலப்பட மாட்டீர்கள். இதனால் நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள் என்று அர்த்தம் கிடையாது. அங்கேயே இருக்கிறீர்கள், ஆனால் வேறொரு பரிமாணத்திற்கு நகர்ந்து போய் விட்டீர்கள். அதே உயிர்சக்தி ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்திற்கு நகர்கிறது. உடலளவிலிருந்து இன்னும் சற்றே நுட்பமான நிலைக்குப் போகிறது. இங்கேயே இருக்கிறீர்கள், ஆனால் உடல்சார்ந்த உருவத்தில் அல்ல. தன்னில் இருந்த வளர்ந்த உடலை மட்டும் பூமி மீண்டும் எடுத்துக் கொள்ளும்.
ஒருவர் இறந்துவிட்டால் 'அவர் இல்லை' என்பீர்கள். அது உண்மை அல்ல. அவர் இருக்கிறார், ஆனால் நீங்கள் உணரும் வகையில் அவர் இல்லை, அவ்வளவுதான். தனக்குள் இருக்கும் பதிவுகள் அனைத்தையும் முற்றிலுமாய் கரைத்துவிட்டு, உடலைத் துறந்தால் மட்டுமே, 'அவர் இல்லை'. அதுதான் ஆட்டத்தின் முடிவு.
ஆனால் ஒருவர் ஏன் ஆட்டத்தை முடிக்க விரும்ப வேண்டும்? அனைத்தையும் பார்த்தாகிவிட்டது, இது போதும் என்று அவர் நினைப்பதால். ஒவ்வொருவரும் பல பிறவிகள் வாழ்ந்திருப்போம். எல்லாப் பிறவிகளின் ஞாபகங்களும் நம் ஆழ்மனத்தில் பதிந்திருக்கிறது. என்ன, தற்போதைய விழிப்புணர்வில் உங்களுக்கு அவை எட்டுவதில்லை. பூட்டி வைக்கப்பட்டது போல், அதை நீங்கள் நெருங்க முடியா வண்ணம் அவை அடைபட்டு இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் ஞாபகசக்தி, இந்தப் பிறவியில் பிறந்ததிலிருந்து இன்று வரை மட்டுமே. எனவே, "நான் ஏன் ஆட்டத்தை நிறுத்த வேண்டும்" என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒரு வேளை இதே போல் நூறு முறை செய்திருக்கிறேன், வாழ்ந்திருக்கிறேன், இறந்தும் இருக்கிறேன் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தால், எல்லாவற்றையும் தெளிவாகப் பார்த்திருந்தால், மீண்டும் ஒருமுறை இதே அர்த்தமற்ற வாழ்க்கை வாழ விரும்பமாட்டீர்கள் அல்லவா? இந்த வாழ்க்கையைத் தாண்டி வேறு என்ன இருக்கிறது என்று பார்க்க விரும்புவீர்கள் தானே?
ஒருவர் விழிப்புணர்வுடன் தன் உடலைத் துறந்தால், அவர் உண்மையிலேயே இல்லை என்று பொருள். எந்தப் பரிமாணத்திலும் அவர் இல்லை. இதுதான் முக்தி. ஆட்டம் முடிந்துவிட்டது, அவ்வளவுதான்.
மனதில் பதினொரு நிலையிலான பரிமாணங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று அடக்கமாய் ஒரே இடத்திலேயே இருக்கின்றன//
***சாமியார் வேடம் புனைந்துகொண்டு, தான் செய்த குற்றத்தை மறைக்க எதையெல்லாமோ, எப்படியெல்லாமோ சளைக்காமல் பேசிப் பேசிப் பேசிக் கேள்வி கேட்பவர்களை மூடர்கள் ஆக்கும் கடைந்தெடுத்த ‘நம்பர் 1’ அயோக்கியனைரை இந்த உலகம் இதுவரை கண்டதில்லை என்பது நம் எண்ணம்.
உங்களின் எண்ணமும் இப்படியானதாகத்தான் இருக்க முடியும்.
தங்களின் வருகைக்கு நன்றி!
குறிப்பு: https://isha.sadhguru.org/ta/wisdom/article/mahasamadhi-enral-enna என்னும் முகவரியில் இடம்பெற்றிருந்த, ‘மகா சமாதி’ பற்றிய ஜக்கியின் விளக்கத்தை இன்று காலை வாசித்ததன் விளைவு இந்தப் பதிவு.
இவ்வாறான விமர்சனத்தை எவரேனும் பதிவு செய்திருக்கிறார்களா என்பதை அறிய இயலவில்லை.