சற்று முன்னர்[காலை 07.30 மணி] ‘சன்’ தொலைக்காட்சியில் வெளியான உவப்பூட்டும் செய்தி:
‘மேகாலயா’ சட்டப்பேரவை கூடவிருக்கும் நிலையில்,
தொடக்க உரை ஆற்றவுள்ள ஆளுநர் பி.டி.மிஸ்ரா என்பவர் தம் உரையை இந்தியில் வாசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதை எதிர்த்து மேகாலயா சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் தெற்கு மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், கர்னாடகாவிலும் கேரளாவிலும்கூட இந்தி எதிர்ப்புப் புயல் மையம்கொண்டிருக்கும் நிலையில், வடகிழக்கே உள்ள ஒரு மாநிலத்தில்[மேகாலயா] இந்தித் திணிப்புக்குக் கடந்த ஆண்டிலிருந்தே கடும் எதிர்ப்புப் புயல் வீசத் தொடங்கியிருப்பது, இந்தியாவை ‘இந்தி’யாவாக ஆக்க முயலும் இந்தி மொழி& இன வெறியன்களை எச்சரிப்பதாக அமைந்துள்ளது.
இப்புயல், இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற மாநிலங்களிலும் உருவாதல் வேண்டும் என்பது நம் ஆசை.
வெகு விரைவில் இந்த ஆசை நிறைவேறும் என்பது நம் நம்பிக்கை.
* * * * *
கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில்[மார்ச், 2023] ஆளுநர் இந்தியில் உரையாற்றியபோதே எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்பது அறியத்தக்கது.
//மேகாலயாவில் கடந்த திங்கள்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது மேகாலயா ஆளுநர் பாகு செளஹான் உரை நிகழ்த்தித் தொடங்கிவைக்க வந்திருந்தார். ஆங்கிலத்தை அலுவல் மொழியாகக்கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில், ஆளுநர் இந்தியில் உரை நிகழ்த்தினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த விபிபி கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரை ஆங்கிலத்தில் உரையாற்றக் கோரிக்கை விடுத்தனர். இதனால், அவையில் அமளி ஏற்பட்டது.// https://www.vikatan.com/government-and-politics/meghalaya-vpp-stages-walkout-in-protest-of-governors-hindi-speech
***இச்செய்தி மிகப் பல ஊடகங்களில் 2023இல் வெளியானது குறிப்பிடத்தக்கது.