வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

கட்சிக் கொடிக்கு அம்மன் திருப்பாதப் பூஜை! கட்சித் தலைவனுக்கு?!

கொடி என்பது ஓர் அமைப்பு[கட்சி]க்கான அடையாளச் சின்னம்.

விரும்பினால், அதைக் கம்பத்தில் ஏற்றி மரியாதை செலுத்தலாம். உதாரணம் ஒரு நாட்டின் கொடி[தேசியக்கொடி]. அதன் மதிப்பு அவ்வளவுதான்.

தமிழக வெற்றிக் கழகம் என்பது ஒரு புதிய கட்சி. அதற்கான கொடியை அதன் தலைவர் நடிகர் விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினாராம்.

அந்தக் கொடியை மதுரை மீனாட்சியம்மன் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்யச் சென்றாராம் ஒரு நடிகர்[சௌந்தர்ராஜன்]. செய்திருப்பார் என்று நம்பலாம்.

இதைச் செய்தியாக வெளியிட்டுப் பொதுத் தொண்டு செய்திருக்கிறது https://tamil.samayam.com.

இருப்பில் உள்ள ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கைகளில் இது[கொடிக்குப் பூஜை செய்வது] புதுசு என்பது அறியத்தக்கது[அம்மனுக்குரிய பூஜைப் பொருட்கள், நகைகள், ஆடைகள், பணக் கட்டுகள் என்று எதையெதையோ வைத்துப் பூஜை செய்கிறார்கள்].

நடிகருக்கு[சௌந்தர்ராஜன்] இது நல்ல நம்பிக்கையாக இருக்கலாம். இருக்கட்டும்.

இன்று கொடிக்குப் பூஜை செய்தவர் அடுத்து ஒரு நாளில் கொடிக் கம்பத்தையும், அப்புறம் ஒரு நாளில் கொடிக் கயிற்றையும் அம்மன் காலடிகளில் வைத்து பூஜை செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

இவற்றின் தொடர்ச்சியாக, கட்சிக் கொடியை அறிமுகம் செய்த நடிகரையும்[விஜய்] அம்மன் பாதங்களில் கிடத்திப் பூஜை செய்வாரோ?

செய்தால்.....

கட்சிக் கொடி, கயிறு, கம்பம் ஆகிவற்றுடன் கட்சித் தலைவருக்கும் அம்மன் திருவடிப் பூஜை செய்து சாதனை நிகழ்த்தினார் ஓர் அல்லக்கை நடிகர் என்று உலகோர் வியப்பார்கள்; புத்தம் புதிதாக ஒரு மூடநம்பிக்கையை உருவாக்கியதற்காகப் பாராட்டவும் செய்வார்கள்!

நடிகருக்கு நம் பாராட்டுகள்!

                                       *   *   *   *   *

https://tamil.samayam.com/latest-news/madurai/actor-soundararaja-worshiped-with-tvk-flag-at-madurai-meenakshi-amman-temple/articleshow/112737124.cms