வெள்ளி, 4 அக்டோபர், 2024

ஜக்கி மீதான உயர் நீதிமன்ற நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றத் தடை! பின்னணி என்ன?

காணொலி, ஆன்மிகத்தின் பெயரால் ஜக்கி செய்த/செய்யும் அத்தனை அட்டூழியங்கள் குறித்தும்,  அவன்ர் வளர்ச்சிக்கு உதவிய/உதவும் மதவெறிக் கும்பலின் உள்நோக்கம் குறித்தும் விவரிக்கிறது.

வியாழன், 3 அக்டோபர், 2024

முதலிரவில் கோமியம்! முழு அந்தரங்கச் சுகத்திற்கும் குடிக்கலாம்!!

"மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி, நவராத்திரிப் பண்டிகையின்போது கர்பா நடனக் கொண்டாட்டத்திற்கு அனுமதிக்கும் முன் இந்துக்களுக்குக் குடிக்ககக் கோமியம் தர வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

பசுவைக் கோமாதா என்று கொண்டாடுவதும், புனிதமான அதன் சிறுநீரைப் பருகிச் சுகானுபோகத்தில் திளைப்பதும் இந்துக்களின் பாரம்பரியப் பழக்கமாகும்.

எனவேதான், "உண்மையான இந்துக்கள் இதை மறுக்கமாட்டார்கள். பந்தலுக்குள் நுழையும் முன் நிச்சயம் கோமியம் குடிப்பார்கள்" என்று சொல்லியிருக்கிறார் பாஜக நிர்வாகி.

ஆக, கோமியம் என்பது உண்மை இந்துக்களின் வாழ்க்கையில் பிரிக்க இயலாத அளவுக்கு இரண்டறக் கலந்துள்ளது எனலாம்.

ஆகவே, கர்பா நடனக் கொண்டாட்டத்திற்குச் செல்லும்போது  மட்டுமல்ல, காலையில் காபி, தேனீர் ஆகியவற்றிற்குப் பதிலாக ஒரு கோப்பை[பெருசு]க் கோமியம் குடிக்கலாம்.

தாகம் எடுக்கும்போதெல்லாம் அருந்தலாம்.

திருமணம் போன்ற விசேடங்களில் விருந்தினரை வழியனுப்பும்போது தாம்பூலப் பையுடன் ஒரு சிப்பம் கோமியம் சேர்த்துக் கொடுக்கலாம்.

புதுமணத் தம்பதியருக்கான முதலிரவில், பாலுக்குப் பதிலாகக் கோமியம்  நிரப்பிய செம்பைப் பெண்ணிடம் கொடுத்தனுப்புவது உத்தமம்.

கணவனும் மனைவியும்[கள்ளக் காமுகர்கள் உட்பட] உடலுறவு கொள்வதற்கு முன்பு கோமியம் குடிப்பதை வழக்கம் ஆக்கலாம்.

இதனாலெல்லாம், இந்துக்கள் பல நன்மைகள் பெறுவதோடு, அவர்கள் இந்து தர்மம் காக்கும் கடமையைச் செய்தவர்கள் ஆவார்கள்.

வாழ்க கோமாதா! வாழ்க கோமியம் குடிக்கும் இந்துக் குடிமக்கள்!!

                                     *   *   *   *   *

https://www.maalaimalar.com/news/national/bjp-leader-propose-gaumutra-sip-as-entry-pass-to-navratri-garba-pandals-740897?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMwssCgAw&utm_content=rundown

புதன், 2 அக்டோபர், 2024

கடவுளின் குருவை[சத்குரு ஜக்கி]க் கைவிட்டாரா ‘கடவுளால் அனுப்பப்பட்டவர்’!?!?!

கோவை, வடவள்ளிப் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர் ஒரு வழக்குத் தொடர, அது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல் துறையினர், மாவட்ட சமூக நலத்துறையினர், குழந்தைகள் நலத்துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரடியாக ஈஷா மையத்தில் நேற்று விசாரணை மேற்கொண்டனர்; இன்றும்[02.10.2024] அது தொடர்கிறது[முழு விவரம் கீழே உள்ள முகவரியில்*].

கடவுள்களின் குரு[சத்>பரம்பொருள்>கடவுள்; குரு> கடவுளுக்குக் குரு]என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட ஜக்கி வாசுதேவன், இந்தியாவின் முன்னாள்/இந்நாள் பிரதமரான மோடிக்கும் குருவாக இருப்பவர்[படம்].

ஆன்மிக நெறி பரப்புவதாகச் சொல்லி[குறிப்பாக ‘யோகா’], வாசுதேவனால் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உருவாக்கப்பட்டதுதான் ‘ஈஷா யோகா மையம்’.

கஞ்சா விற்றது, தன் மனைவி உயிரோடு ‘மகாசமாதி’ ஆனதாகப் பொய் பரப்பியது, இளம் பெண்களைக் கவர்ந்திழுத்துத் துறவிகள் ஆக்குவது[தப்பான காரியங்களுக்கும் பயன்படுத்தலாம்] மூளைச்சலவை செய்து அப்பாவிகளைத் தன் அடிமைகள் ஆக்குவது, நன்கொடைகள் என்னும் பெயரில் கணக்குவழக்கில்லாமல் கோடி கோடியாய்ப் பணம் வசூலித்தது, மரங்கள் வளர்ப்பதாகவும், ஆறுகள் காப்பதாகவும் புளுகி மானாவாரியாய் நிதி திரட்டியது என்று ஏராளக் குற்றச்சாட்டுகள் இந்த நபர் மீது சுமத்தப்பட்டன[தேடுபொறியில், ‘போலிச் சாமியார் ஜக்கி’ என்பது போல் தட்டச்சிட்டுத் தேடுக]; வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

அவற்றால் எல்லாம் இந்த ஆளின் சுட்டு விரலைக்கூட அசைக்க முடியவில்லை.

இவருக்குப் பேராதரவு வழங்கிய மிகப் பெரிய மனிதர்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதாலோ[குருவின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் விளைவு?] என்னவோ இன்று அந்நிலை மாறியிருக்கிறது.

நீதிமன்ற ஆணைக்கிணங்க இந்தப் போலிக் கோடீஸ்வரச் சாமியாரின் சாம்ராஜ்ஜியத்திற்குள் நுழைந்து விசாரணை நடத்தியது/ நடத்துகிறது அரசு இயந்திரம்.

இந்த ஆடம்பரச் சாமியார் செய்த அத்தனை அட்டூழியங்களும் அம்பலத்துக்கு வந்து, இவன் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்பது நம் மக்கள் விருப்பம்.

அது நிறைவேற வேண்டும் என்றால், வரவேற்கத்தக்க ஆணையை[ஈஷாவில் விசாரணை]ப் பிறப்பித்த உயர் நீதிமன்றம், இனியும் எவரொருவரின் தலையீட்டையும் பொருட்படுத்தாமல் செயல்படுவது மிகவும் அவசியம்.

நீதி வெல்லும் என்று மனப்பூர்வமாய் நம்புவோம்.

                               *   *   *   *   *

*https://tamil.indianexpress.com/tamilnadu/inquiry-will-continues-in-isha-and-isha-statement-on-police-inquiry-7237235

                                   *   *   *   *   *

***** திருப்பதி ‘கொழுப்பு லட்டு’ வழக்கில் நீதிபதி பி.ஆர்.கவாய், “அரசியல் சாசனப் பதவி வகிப்பவர்கள், ​​கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.....” என்று அறிவுரை வழங்கியமை பெரிதும் மகிழ்ந்து பாராட்டத்தக்கது. https://www.hindutamil.in/news/india/1319361-keep-gods-away-from-politics-supreme-court-on-tirupati-laddu-row-2.html


செவ்வாய், 1 அக்டோபர், 2024

இத்தனைத் தன்னம்பிக்கையை அவர்[மாற்றுத்திறனாளி] எங்கிருந்து பெற்றார்?!?!?!

சற்று முன்னர் ‘யூடியூப்’ தளத்தில் உலவியபோது கண்ணில் பட்ட காணொலி கீழே. 

கலங்கியது என் நெஞ்சம். நம்பமாட்டீர்கள் என்பதால் கண்களில் சிறிதே கண்ணீர் வழிந்தது என்று சொல்ல விருப்பம் இல்லை.

தோல்விகளால் மனம் துவளும்போதெல்லாம் தன்னம்பிக்கை ஊட்டும் காணொலி; பிறருடன் பகிரலாம்.