Quora.com 'கேள்வி-பதில்’இல் இடம்பெற்றது.
வேதாகமத்தில் இல்லை. கிறிஸ்தவர்களிடம் உண்டு.
எனக்குத் தெரிந்தவற்றில் சில:
- அவர்களின் மனதிலிருக்கும் கேள்விக்கான தேவனின் பதிலைப் பெற, வேதாகமத்தை எதேச்சையாகப் புரட்டி, ஒரு வசனத்தைப் படித்து, அதை தேவன் கதைப்பதாக[தேவனின் பதிலாக] எடுத்துக்கொள்வது.
- வெள்ளை நிற ஆடை அணிவதால் பரிசுத்தவான்கள் ஆவதாக எண்ணுவது.
- சத்தமாக வேண்டிக்கொண்டால் தேவன் கேட்பார் என நம்புவது.
- அதிக வசனங்களால், விதவிதமான வசனங்களால் வேண்டிக்கொண்டால் அவர் கேட்பார் என எண்ணுவது.
- ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெய், இறுவட்டு(CD), எருசலேமிலிருந்து கொண்டுவரப்பட்ட மண், ஜோர்தான் நதியின் நீர், இன்னும் இவை போன்றவற்றைப் புனிதமாகக் கருதுவது.
- எருசலேமுக்குப் புனிதப் பயணம் போவது.
- சிலுவைகளை வீட்டிலோ, வேலை பார்க்கும் இடங்களிலோ, வாகனங்களிலோ பாதுகாப்புக் கருதி வைத்திருப்பது.
- சிலுவை பென்டன் போட்ட மாலை அணிவது.
- வேதாகமத்தைத் தொட்டு வணங்குவது.
- நன்றி, பலி என்னும் பெயரில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது.
- சாத்தானைக் கட்டி(binding) ஜெபிப்பது.
தாங்கள் விரும்பும் ஒரு விடயம் ஏற்கெனவே நடந்துவிட்டதாக நினைத்து தேவனிடத்தில் நன்றி சொல்வதால் அது அவ்வாறே உண்மையில் நடக்கும் என நம்புவது.- வேதாகமத்தில் இல்லாத புதிய விடயங்களைத் தேவன் தங்களுக்கு அறியப்படுத்தியதாகக் கூறுபவர்களை நம்புவது.
- சிறுவர்கள், குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குவது.
- இயேசுவை ஏற்றுக் கொண்டால் போதும், பாவங்களைவிட்டு மனந்திரும்ப வேண்டியதில்லை[?] என நம்புவது.
- விசுவாசிகளுக்குப் பூமியில் சாகாவரம் உண்டு என நம்புவது.
- அதிகமாகக் காணிக்கை கொடுத்தால் அதிகப் பலன் கிடைக்கும் என நம்புவது.
- சாதி வித்தியாசம் பார்ப்பது.
***நன்றி கஜனன் செல்வராஜ்.