செவ்வாய், 10 டிசம்பர், 2024

“நீங்கள் சத்குருவின் அரவணைப்பில் இருக்கிறீர்கள்! சத்குரு நமக்குக் கிடைத்த தெய்வம்!!”


காணொலியில் இடம்பெற்ற பெண் துறவியின் உரையைக் கேட்டு, மெய் சிலிர்த்துக் கண்ணீர் சிந்தி 120[பிற்பகல்02.30]க்கும் மேற்பட்ட சத்துக்குருவின் அடிப்பொடிகள் உருக்கமான கருத்துரைகளை வழங்கியிருக்கிறார்கள்.

ஓர் எடுத்துக்காட்டு: 
----------------------------------------------------------------------------------

@namaskaram1176

14 மணிநேரம் முன்NAMASKARAM SADHGURU 🙏🏾👣, நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் சற்குருவின் அரவணைப்பில் இருக்கிறீர்கள். சற்குரு நமக்கு கிடைத்த தெய்வம்மா உங்களது பாதங்களை தொட்டு வணங்கி கொள்ளுகிறேன் 👣🙏🏾]
--------------------------------------------------------------------------------------------------------------------------
துறவியம்மாவின் உரையில் மனதைப் பறிகொடுத்த யூடியூபர் ஆறறிவன் பதிவு செய்த கருத்துரை பின்வருமாறு.

இவர் கஞ்சா விற்றவர், பெண்டாட்டியைச் சமாதி ஆக்கியவர்னு சொல்லுறதை இத்தனை நாளும் நம்பினேன்.

அது எத்தனைத் தப்புன்னு உங்க பேச்சைக் கேட்டப்புறம்தான் தெரியுது.

உண்மையில், என் அறியாமை இருளை அகற்றி அருளிய நீங்கதான் கடவுள். அவரைக் கடவுள்னு சொல்லுறது தப்பு.

ஏன்னா, அவர் எல்லாக் கடவுளுக்கும் மேலானவர்[இவருடைய ‘பீ’[மலம்] கம கமன்னு மணக்கும். வெளியேறும்போது ஆவியாகிப் பிரபஞ்ச வெளியில் கலந்து மறைஞ்சிடும்]; அதாவது ‘சத்குரு’.

‘சத்’துன்னா பரம்பொருள்[முழுமுதல் கடவுள். ஆதாரம்: கீழே].

ஒட்டுமொத்த உலகுக்கும் இந்த மேலான கடவுளே போதும். இனி வேறு எந்தக் கடவுளையும் மக்கள் தொழக்கூடாதுன்னு நான் சொல்லல.

நான் சொன்னா எவனும் நம்பமாட்டான்; கேட்கவும் மாட்டானுக. நீங்களே சொல்லிடுங்க தெய்வமே.
                                  *   *   *   *   *
* * *'சத்’ >மாறுதலே இல்லாத முடிவான உண்மையை உறுதிப்படுத்த `ஸத்` என்பதை பரப்பிரம்மம் என்றும் கூறுவர். அங்கிங்காணாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இப்பரம்பொருள் ‘இருக்கிறது’ (ஸத்) என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை -விக்கிப்பீடியா.

                                       *   *   *   *   *

மிக முக்கியக் குறிப்பு:

என் கருத்துரை ஈஷா காணொலியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது