#“தாலி அணிவது வெறும் மூடநம்பிக்கையே. அதில் தெய்வீகமோ, புனிதத்துவமோ இல்லை. அது ஒரு சாதாரணமான பொருள் மட்டுமே” என்கிறார்கள் மெத்தப் படித்தப் பெண்களில் பலரும்.
#வேலைக்குச் செல்லும் பெண்களில் பலர் மணமானவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. எனவே, தாலியைத் தங்கள் ரவிக்கைக்குள் மறைக்கிறார்கள்.
#பல பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் கிளம்பும்போது தாலியை வீட்டிலேயே கழற்றி வைத்துவிடுகிறார்கள்.
#பெரும்பான்மையான பெண்கள் இரவில் படுக்கும்போது தாலியைக் கழற்றி தலையணையின் அடியில் வைக்கிறார்கள்.
#கழுத்தில் தாலியுடன் இருக்கும் பெண்களில்[மிகச் சரியான கணக்கெடுப்பு நிகழ்த்தப்படவில்லை, அவர்கள் உண்மையைச் சொல்லமாட்டார்கள் என்பதால்] பலரும் விருப்பம் இல்லாமல்தான் அதை அணிந்திருக்கிறார்கள்.#தாலி என்பது நாய்களின் உரிமம்[கழுத்துப்பட்டை] போன்றதுதான். நாயின் உரிமம் அதன் கழுத்தில் தொங்குவதுபோல் பெண்ணின் கழுத்தில் தாலி தொங்குகிறது, அவ்வளவுதான்.
* * * * *
***கோபிநாத்தின் ‘நானா, நீயா?’[ஸ்டார் தொ.கா.] கலந்துரையாடல் நிகழ்வில் இடம்பெற்ற கருத்துளில் மேற்கண்டவையும் அடக்கம்.