“அவன் உன்னைச் சூத்திரன், தீண்டத்தகாதவன்; உன்னைத் தொட்டால் தீட்டு; நீ என் தெருவுக்குள் நுழைக்கூடாது, பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கும் உரிமை உனக்கு இல்லை, நீ கோயிலுக்குள் வரக்கூடாது; நீ அர்ச்சகர் ஆகக் கூடாது என்று சொல்லிக் காலங்காலமாய் உன்னை இழிவுபடுத்திக்கொண்டிருக்கிறான். நீ சூடு சொரணை எதுவும் இல்லாமல் இப்படி எருமை மாடு மாதிரி இருக்கிறாயே” என்று பெரியார் தமிழனை[தமிழர்களை]த் திட்டினார்.
பெண்களும் படிக்க வேண்டும் என்றார்; மொட்டையடித்து வீட்டில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு மறுமணம் தேவை என்றார். அவர்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்று முழங்கினார்.
பட்டியல் இனத்தவர்களைக் கோவிலுக்கு அழைத்துச் செல்ல முயன்றார்; அவர்களும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.
“தன்மானத்துடன் வாழ்ந்து காட்டு. யார் சொல்வதையும் கேட்காதே சுய புத்திக்கு வேலை கொடு” என்றார்; “கடவுளை மற..... மனிதனை நினை” என்று அறிவுறுத்தினார்.
காந்தி ஒரு பார்ப்பனனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது, கிளர்தெழுந்து அக்கிரகாரத்தை[பார்ப்பணர் குடியிருப்பு]க் கொளுத்த முற்பட்ட இளைஞர்களைத் தடுத்துப் பார்ப்பணர்களைக் காப்பாற்றியவர் பெரியார்.
வேறெந்தப் பற்றைக் காட்டிலும் மனிதப் பற்றே மேலானது என்று சொன்னவர் தந்தை பெரியார்.
மதப்பற்று பிற மதத்தவரை விரோதிகளாகப் பார்க்கச் சொல்லும். கடவுள் பற்று மற்ற கடவுள்களை வணங்குபவர்களை விரோதிகள் என்று வெறுக்கச் செய்யும். சைவம் வைணவம் சமணம் ஆகிய வழிபாட்டாளர்கள் ஒருவரையொருவர் கழுவில் ஏற்றிக் கொடூரக் கொலைகள் செய்ததற்கு இந்தப் பற்றுகள்தான் காரணம்.
உலகம் முழுவதும் நடக்கும் பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணம் இந்த மத & கடவுள் பற்றுகள்தான்.
காலில் பட்ட மலத்தை நீக்கக் கால்களை மட்டும் கழுவுவார்கள். மனிதனின் கையோ காலோ வேறு உறுப்போ தெரியாமல் பட்டுவிட்டால் தீட்டு என்று கூறி உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி குளிப்பவர்களைக் கண்டித்தார் பெரியார்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் பெரியார். இன்றைக்கு நாம் எழுதும் வடிவங்களில் சீர்திருத்தம் செய்தவர் அவர். வடமொழி எழுத்துக்களை இயன்றவரை தவிர்த்தார்.
பெண்களுக்குச் சொத்து உரிமை கோரியவர் பெரியார்.
சாதியையும் மதத்தையும் தாங்கிப்பிடிக்கும் மாநிலங்கள் முன்னேறவில்லை. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மதச் சண்டை குறைவாக இருக்கக் காரணம் பெரியார் மூடநம்பிகைகளை உடைத்துச் சிதறடித்ததுதான்.
பிரம்மாவின் தலையில் பிராமணனும், தோளில் சத்திரியர்களும், காலில் சூத்திரர்களும் உதித்தனர் என்று அவன்கள் கூறியதைச் சாடியவர் பெரியார்.
ஆளுபவன் தமிழ் மன்னன், இஸ்லாமிய வேந்தன், ஆங்கிலேயன் என்று எவராக இருந்தாலும், தங்களின் இனத்தையும் கோட்பாடுகளையும் காப்பாற்றிவந்த பார்ப்பனர்களுக்குப் பேரிடியாக அமைந்தது பெரியாரின் செயல்பாடுகள்.
ஆலய நிதிகளையும், கோவில் நிலங்களையும், சதுர்வேதி மங்கலங்களையும், இன்ன பிற செல்வங்களையும் அனுபவித்து வந்தார்களே அவர்கள், அதைக் குற்றமெனக் கண்டித்ததால்தான் அவர் மீது அவர்களுக்கு அடங்காத கோபம்; அவரைப் பழிதீர்க்கும் அவர்களின் வஞ்சகச் செயல்கள்.
ஆலயப் பிரவேசம், யாகம், புதுமனை விழா, திருமணம், குழந்தைக்குக்குப் பெயர் சூட்டல், இழவு, தீட்டு, கருமாதி, திவசம் என்று எது எதிலோ மூடநம்பிக்கைகளைத் திணித்துப் பிழைப்பு நடத்தியதோடு/நடத்துவதோடு, தங்களைக் கடவுளுக்கு நிகராக மக்களை நம்ப வைத்தவர்கள் அவர்கள். அவர்களைக் கடுமையாகச் சாடினார் பெரியார்.
இப்படி, இன்னும் பெரியார் தமிழர்களுக்காகச் செய்த சேவைகளைப் பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும்.
இந்தப் பெரியாரைத்தான் ஒழித்தே தீருவேன் என்று நாளும் ஓயாமல் சூளுரைத்துக்கொண்டிருக்கிறான் ஊத்தை வாயன் சீமான்.
அவனுக்கு மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரவு தருகிறார்கள் அரசியலில் தொடர் தோல்விகளைத் தழுவிக்கொண்டிருக்கும் அயோக்கியர்கள்.