திங்கள், 20 ஜனவரி, 2025

அப்பாவிப் பக்தர்களைத் திருந்த விடுங்கடா படுபாவிகளா!!!

திரு​வூடல் - மறுவூடல்’ திரு​விழாவையொட்டி திருவண்ணாமலையில் சாமி அண்ணா​மலை​யார் கிரிவலம் சென்​றாராம்[செய்தி]

பக்தக்கோடிகள் கிரிவலம் போவதுதான் வழக்கம். “கடவுள் அண்ணாமலையாரை[மலை வடிவில் காட்சி தருகிறார்] அண்ணாமலையாரே வலம்[கிரிவலம்] வருகிறாரா, இதென்ன கூத்து?” என்று எவரும் மனம் குழம்ப வேண்டாம். கீழ்வரும் சம்பவத்தை[கதை என்று சொன்னால் பக்தர்கள் மனம் புண்படும்] அறிவதன் மூலம் தெளிவு பெறலாம்.

சிவபெரு​மானை[அண்ணாமலையாரேதான்] மட்டும் பிருங்கி மகரிஷி[இவருக்குக் கால்கள் மூன்று!] வணங்​கிய​தால் பார்வதி தேவி சினம் கொண்​டார்; ஊடல்[காதலர் & கணவன் மனைவி இடையேயான தற்காலிகப் பிணக்கு. இச்சையைக் கட்டுப்படுத்த இயலாதபோது அது தணிந்துவிடும். ஹி... ஹி... ஹி!!!] கொண்டார். கோயி​லின் 2-ஆம் பிரகாரத்​தில் உள்ள தனது சந்நி​திக்குச் சென்று தாழிட்டுக் கொள்​கிறார்[இரட்டைத் தாழ்ப்பாள்?!].

அம்மையின் பிரகாரத்தைச் சுற்றிவருவது மட்டுமே அவரின் ஊடல் தணிப்பதற்கான வழி என்பதை அறிந்திருந்த அப்பன் அண்ணாமலையார் பக்தச் சிகாமணிகள் பின்தொடர 14 கி.மீ. தொலைவிலான கிரிவலத்தைத் தொடங்கினார்.

சுவாமிக்கு மண்டகப்படி செய்து, கற்பூரத் தீபாராதனை காண்​பித்து பக்தர்கள் வழிபட்​டார்கள்.

கிரிவலம் நிறைவு பெற்றதும், திட்டி வாசல் வழியாக அம்மை இருக்கும் இடத்தை அடைந்தார் திருவண்ணாமலை அப்பன்.

அப்போது அம்மையும் ஊடல் தணிந்த நிலையில் இருந்தார்.

அண்ணாமலையாருக்கும் அம்பாளுக்​கும் மறுவூடல்[கூடல்?] நிகழ்ச்சி நடைபெற்​றது. பின்னர், இருவரும் இணைந்து பக்தர்​களுக்கு அருள்​பாலித்​தார்கள்.

அடடா, இந்துமதப் புராணங்களில் எப்படியெல்லாம் கதை எழுதியிருக்கிறார்கள்! எந்தவொரு மதத்திலும் இம்மாதிரியான அபத்தக் கதை இல்லை என்றே சொல்லலாம்.

இந்தத் திருவண்ணாமலை நிகழ்ச்சி ஓர் உதாரணம் மட்டுமே.

இப்படியெல்லாம் படு பாவிகள் எழுதிவைத்த கதைகளை நிகழ்ச்சியாக்கி, பக்தர்களைப் பரவசத்திற்கு உள்ளாக்கினால்தான் பக்தி வளருமா?

அக்காலத்தில் ஆட்சி புரிந்த மன்னர்கள் மட்டுமல்ல, பின்னர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களும்கூட, இந்த அயோக்கியர்களின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தவோ, இவர்களைத் திருத்தவோ முயலவில்லை என்பது வெட்கக்கேடு[சாபக்கேடு?].

ஆண்டுதோறும், அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகளை வைத்து, எவனோ எவன்களோ கட்டிவிட்ட இம்மாதிரிக் கதைகளை அவன்களின் பரம்பரையினர் நிகழ்ச்சிகளாக்கி, அப்பாவி மக்களை மூடத்தனத்திலிருந்து விடுபடவிடாமல் தடுத்து, கடவுள்களுக்கு அடுத்த இடத்திலான தங்களின் இருப்பைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அத்தனை இந்துக் கோயில்களிலும், சிற்பிகள் வடித்தெடுத்த சிலைகளை வைத்துக்கொண்டு, விதம் விதமான தங்க வைர நகைகளை அணிவித்து, ஆறு காலப் பூஜை, அர்த்த ஜாமப் பூஜை, அமாவாசைப் பூஜை, பௌர்ணமிப் பூஜை என்று நாள்தோறும் வகை வகையாய்ப் பூஜைகள் செய்வது, ஆண் பெண் சாமிகளுக்கு ஆண்டு தவறாமல் கல்யாணம் கட்டி வைத்து சாந்திமுகூர்த்தம் நடத்துவது என்று இந்த அநாகரிகள் செய்யும் அழும்புக்கு அளவே இல்லை.

சுட்டிக் காட்டிக் கண்டித்தால், ‘இந்துமத எதிரிகள்’, ‘நாத்திக நாதாரிகள்’ என்பன போன்ற அவதூறு வசைமொழிகளை அள்ளித் தெளிக்கிறார்கள்.

இவர்களை அடக்கி ஒடுக்கும் சக்தி ஆட்சியாளர்களுக்கு மட்டுமே உள்ளது. அவர்கள் முதலில் திருந்த வேண்டும். இப்போதைக்குத் திருந்தமாட்டார்கள்.

பாவம் நம் மக்கள்!

* * * * *

https://www.hindutamil.in/news/spirituals/1347238-annamalaiyar-girivalam-in-tiruvannamalai.html