நம் பிரதமர் மோடிஜிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும்[டில்லி முதல்வர் > 14 பெப்ரவரி 2015 – 17 செப்டம்பர் 2024] இடையேயான அவர்களின் சொத்து குறித்த விவாதத்தில், “எனக்கென ஒரு வீடுகூடக் கட்டிக்கொள்ளாமல், நாடு முழுவதும் ஏழை மக்களுக்காக 4 கோடி வீடுகளைக் கட்டியுள்ளேன்” என்று மோடிஜி சொன்னார்.
அதற்குப் பதிலடியாக.....
”தனக்கென ரூ.2,700 கோடியில் வீடு கட்டி, ரூ.10 லட்சம் மதிப்புள்ள உடை அணிந்து[பயன்படுத்தும் பேனா ஒரு லட்சம் ரூபாய் என்கிறார்], ரூ.8,400 கோடி மதிப்புள்ள விமானத்தில் பயணிப்பவர் இதைப் பேசுவதில் நியாயமில்லை” என்று அதிர்ச்சிச் செய்தி வெளியிட்டிருக்கிறார் கெஜ்ரிவால்.
நம் கேள்வி:
இருவரில் எவர் சொல்வது உண்மை?
கெஜ்ரிவால் நம்மைப் போல் ஒரு சாதாரண மனிதர். அவர் பொய்யுரைப்பதற்கு நிறையவே வாய்ப்புள்ளது.
மோடிஜியோ கடவுளால் அனுப்பப்பட்டவர். அவர் சொல்வதில் அணுவளவும் பொய் கலக்க வாய்ப்பே இல்லை.
ஆகவே மக்களே, கோடி கோடிகளில் சொத்துச் சேர்க்கிற ஊழல் அரசியல்வாதிகளுக்கிடையே, தனக்கென ஒரு வீடுகூடக் கட்டிக்கொள்ளாத, அப்பழுக்கற்ற தியாகியான மோடி அவர்கள் தாமாக ஓய்வு பெறுவாரேயானால்[அவரின் கடைசி மூச்சுவரை தேர்தலில் தோல்வியுறச் செய்ய எந்தக் கொம்பனாலும் முடியாது] அவர் வசிப்பதற்காகக் குறைந்தபட்சம் ஒரு சிறு குடிலேனும் கட்டித்தருவது[அரண்மனை போன்ற பங்களாவும் கட்டலாம்] நம் அனைவருடைய கடமையும் ஆகும்.
மறவாதீர், அவர் ஓய்வு பெறும் அந்த நாளுக்காகக் காத்திருப்போம்.
வாழ்க மோடிஜி! தொடர்க அவரின் மக்கள் பணி!!
* * * * *
https://www.dinakaran.com/prime-minister-modi-reply-arvind-kejriwal/