திங்கள், 17 பிப்ரவரி, 2025

கவர்ச்சியின் மறுபக்கமும் ‘குடுகுடு’ கிழங்களின் மனமாற்றமும்!!!

‘கவர்ச்சி’ என்றால் ‘ஈர்க்கும்’ தன்மை. கண்ணையும் கருத்தையும் கவர்வது என்று விளக்கம் தரலாம்.

இதன் எதிர்ச்சொல் ‘அசிங்கம்’.

‘அசிங்கம்’..... வெறுக்கத்தக்கது; அருவருக்கத்தக்கது என்றும் சொல்லலாம்.

ஆணின் எடுப்பான தோற்றமும் பெண்ணின் கவர்ச்சியான உறுப்புகளின் அமைப்பும் ஒருவர் மீது பிறிதொருவர் ‘நாட்டம்’ கொள்ளச் செய்பவை; பாலுணர்ச்சியைத் தூண்டி உடலுறவு கொள்ள வைப்பவை.

வெளியேற்றும் கழிவின் கெட்ட நாற்றம், நாசியில் வழியும் ‘கொழகொழ’ சளி, கண்களில் வெளியேறும் ‘பிசுபிசு’ பீழை என்று இருபாலாரிடத்தும் அருவருக்கத்தக்க அம்சங்களும் உள்ளன.

துள்ளும் இளமைப்  பருவத்தில், எப்போதேனும் அருவருக்கத்தக்கவை உள்மனதை உறுத்தினாலும் அவ்வப்போதே அவை காணாமல் போவதற்கு, எப்போதும் கவர்ச்சி அம்சங்களின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதே காரணம். விளைவு, ஆசைப்படும்போதெல்லாம் இடர்ப்பாடு இல்லாமல் அந்தரங்கச் சுகத்தை அனுபவிக்கிறார்கள் ஆடவரும் பெண்டிரும்.

வயது ஆக ஆக…..

கவர்ச்சி அம்சங்களின் ஆதிக்கம் குறைவதால், அருவருக்கத்தக்கனவற்றின் பாதிப்பு அதிகரிக்கிறது. அதனால், பாலுறவின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்குகிறது.

வயது முதிர்ந்த குடுகுடு கிழங்கள் இளசுகளைப் பார்த்து, “கொட்டம் அடிக்கிறார்கள்….. கும்மாளம் போடுகிறார்கள்” என்றெல்லாம் கரித்துக்கொட்டுவதற்கான காரணம் இதுதான்!

இது இயற்கை நிகழ்வா, இறைவனின்[இருந்தால்] திருவிளையாடலா?!