அனைத்தையும் படத்தவர் கடவுள் என்றால், அவரைப் படைத்தவர் யார் என்னும் கேள்வி தவிர்க்க இயலாதது. அவரைப் படைத்தவர் அவரினும் மூத்த கடவுள் என்றால், அந்த மூத்தவரை... அவரினும் மூத்தவரை... அந்த மூத்தவருக்கு மூத்தவரை... என்றிப்படியாக, படைத்தவர்களைப் படைத்த படைப்பாளர்கள் பற்றிக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாமே தவிர, மிகச் சரியான விடை பெறுதல் இயலாது. விடை கிடைக்கும்வரை[அத்தனை எளிதல்ல> எவருக்கும் புரியாத புதிர் இது], கடவுளைப் படைத்தவன் மனிதன்[கடவுளின் கடவுள்] என்று சொல்லிக்கொள்ளலாம்.