எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

ஒரே கடவுளும் ஒருங்கிணைந்து பொய்யுரைக்கும் மதங்களும்!!!

 

'அவன் ஒருவனே’...

எல்லா மதத்தவரும் இதையேதான் சொல்கிறார்கள்.

மனிதர்களுக்கு வாய்த்திருக்கும் அறிவு முழுமையானது என்றோ, இதற்கும்[மனித அறிவு] மேம்பட்டதான அறிவு இல்லை என்றோ நிறுவுவது சாத்தியமே அல்ல.

மனித அறிவு ‘குறை அறிவு’; அதாவது, குறைபாடு உடையது.

இதைக்கொண்டு பிரபஞ்ச வெளி[அளவுகோள்களுக்குக் கட்டுப்படாதது]யிலுள்ள அனைத்துப் பொருள்களின்[உயிர்கள் உட்பட] என்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்வதென்பதே இயலாதது.

அப்புறம் எப்படி, கடவுள் இருப்பதே உறுதிப்படுத்தப்படாத நிலையில்,  ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார் என்கிறார்கள்[பல கடவுள்கள் இருந்தால் படைப்பதில் போட்டியும், படைத்தவற்றை நிர்வகிப்பதில் குழப்பமும் ஏற்படும் என்பது மூடத்தனத்தின் உச்சம்].

மனிதர்களுக்கு இந்த ‘ஒன்று’இன் மீது அளப்பரிய பிரேமை ஏற்பட்டது எப்படி?

எப்படி?!?!?!