#தைப்பூசத் திருவிழாவை ஒட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைதளத்தில், “தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், “யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதே எங்களுடைய நிலைப்பாடு” என்று கூறியிருந்தார்[அதற்கேற்ப விஜய் கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கும் வாழ்த்துகளைப் பதிவு செய்திருந்தது நினைவுகூரத்தக்கது]#
மேற்கண்டது ‘இந்து தமிழ்’ச் செய்தி.
முரண்பாட்டின் மொத்த உருவமா இந்தத் ‘த.வெ.க.’ கட்சித் தலைவன் நடிகன் விஜய்!?
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்[கடவுள் ஒருவரே] என்பதே எங்கள் நிலைப்பாடு’ என்று அறிவித்த நிலையில், முருகப்பெருமானைத் தனிப்பெரும் கடவுள்[கடவுள்களுக்குள் உயர்ந்தவர்] என்று புகழ்வதும், கிறிஸ்மஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதும் முரண்பாடு; அடிமுட்டாள்தனம்.
பெரியார் பின்பற்றிய கொள்கைகளில் தலையாயது கடவுள் மறுப்புக் கொள்கைதான். அதில் இந்தத் தனிப்பெரும் தலைவனுக்கு உடன்பாடு இல்லையாம். அப்புறம் அவரை ‘எங்கள் கொள்கைத் தலைவர்’ என்றது எப்படி?
முட்டாள் ரசிகர்களை நம்பிக் கட்சி ஆரம்பித்து ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிடும் இந்த நடிகன் பெரியாரைத் தன் கொள்கைத் தலைவன் என்று கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
* * * * *