பிறந்து வாழும் மனிதர்கள் எல்லோருமே சுயநலவாதிகள்தான். அதாவது, தம் நலம் குறித்தே அதிகம் சிந்திப்பவர்கள்.காலப்போக்கில் கேள்வியறிவு, நூலறிவு, அனுபவ அறிவு, சுய சிந்தனை அறிவு ஆகியவற்றின் மூலம் பொதுநலவாதிகளாக மாறுகிறார்கள் இவர்களில் சிலர். அதாவது, தம் நலம் குறித்துக் குறைவாகவும் பிறர் நலம் குறித்து மிகுதியாகவும் சிந்திப்பவர்கள் இவர்கள்.
இந்த இவர்களில் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள், பொது நலம் நாடுவோர், சமூகச் சீர்திருத்தவாதிகள் போன்றோர் அடங்குவர்.
ஒரு சந்தேகம்......
மேற்கண்ட இரு பிரிவுகளில் கடவுளை எதில் சேர்க்கலாம்?
தான் படைத்து ஆளுகிற அனைத்து உலகங்கள் பற்றியும், அவற்றில் வாழும் உயிரினங்கள்[மனிதர் உட்பட] பற்றியும் சிந்திப்பவர்; சிந்தித்துக்கொண்டிருப்பவர் என்பதில் சந்தேகம் இல்லை, சிந்தித்தால்தானே அவற்றைச் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதால்.
எனவே, கடவுளும் ஒரு பொதுநலவாதியே.
அந்தப் பொதுநலவாதி எப்போதேனும், அல்லது அவ்வப்போதேனும் தன்னைப் பற்றியும்[தன் தோற்றம், ஆற்றல், செயல்படும் முறைகள், எதிர்காலம் பற்றியெல்லாம்] சிந்திப்பவராக, அதாவது சுயநலவாதியாக இருப்பதுண்டா?
மிகவும் சிக்கலான கேள்வி!
கடவுள்களின் குருவான ஜக்கி வாசுதேவரிடமோ, கடவுளால் அனுப்பப்பட்ட நரேந்திர மோடியாரிடமோ கேட்டால் விடை கிடைக்குமா?!
