காலங்காலமாய், கடவுள்களின் பெயரால் நம்பவே இயலாத கற்பனைக் கதைகளைப் பரப்பி மக்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைத்தது போதாதென்று, இன்றைய அறிவியல் யுகத்திலும் அதே நாசகாரச் செயலில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் இந்துமதவாதிகள். இவர்களுக்கு உறுதுணையாய் இருப்பவை நம் ஊடகங்கள்.
6 Indian Cities Where Lord Vishnu's Presence Is Still Felt - MSN -இது 2025இல் வெளியானது. வாசியுங்கள். எப்படியெல்லாம் மூளையை மழுங்கடிக்கிறார்கள் என்பது புரியும்[அடைப்புக் குறிகளுக்குள் நம் விமர்சனம்].
1.பத்ரிநாத்:
இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத், இந்தியாவின் மிகவும் புனிதமான யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும். கடுமையான மலை வானிலையின் கீழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விஷ்ணு இங்கு தியானம் செய்ததாக நம்பப்படுகிறது[கடவுளாயிற்றே, எதற்காக, எவரை நினைத்துத் தியானம்?].
குளிரில் இருந்து அவரைப் பாதுகாக்க[ஆனானப்பட்ட கடவுளுக்கே குளிருமா?!], லட்சுமி தேவி ஒரு பத்ரி மரமாக மாறியதாகக் கூறப்படுகிறது, இதனால் அந்த ஊருக்கு அந்தப் பெயர் வந்தது.
கோயிலில் வைக்கப்பட்டுள்ள விஷ்ணுவின் கருங்கல் சிலை, சுயமாக வெளிப்பட்டதாக நம்பப்படுகிறது[இந்த மாதிரிக் கதைகள் கணக்கிலடங்காதவை].
2.துவாரகா:
குஜராத்தின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள துவாரகா, பகவான் கிருஷ்ணரின் ராஜ்ஜியமாக இருந்ததாக நம்பப்படுகிறது.[ஒட்டுமொத்தப் பிரபஞ்சமே அவர் காலடியில் கிடக்கும்போது ஒரு துக்கிளியூண்டு ராச்சியம் எதற்கு?].
ஒரு நாளைக்கு ஐந்து முறை மாற்றப்படும் கோயிலின் கொடி, எப்போதும் காற்றின் எதிர்த் திசையில் பறக்கிறது[புளுகுவதற்கு வரம்பே இல்லையா?].
3.பூரி:
ஒடிசாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள பூரி, ஜகந்நாதர் கோயிலின் தாயகமாகும். இந்தக் கோயில் கொடி காற்றின் எதிர் திசையில் மர்மமாகப் பறக்கிறதாம்[அதே கதை].
4.ராமேஸ்வரம்:
கோயில் வளாகத்திற்குள் உள்ள 22 புனிதக் கிணறுகளில் நீராடுவது உடலையும் ஆன்மாவையும் சுத்திகரிக்கிறதாம்[இது உண்மை என்றால் மனிதர்கள் அத்தனைப் பேருமே யோக்கியராக ஆகியிருப்பார்கள்].
5.ஹரித்வார்:
உத்தரகண்டில் கங்கையின் கரையில் அமைந்துள்ள ஹரித்வார், கங்கை நதி சொர்க்கத்திலிருந்து[அதைப் பார்த்தவன் எவனும் இல்லை] பூமிக்கு இறங்கிய இடம் என்று நம்பப்படுகிறது.
புனித மலைத்தொடர், ஹர் கி பௌரி, விஷ்ணுவின் கால்தடத்தைத் தாங்கியதாகக் கூறப்படுகிறது[விஷ்ணு எங்கும் உட்காரவோ நீட்டிப் படுக்கவோ இல்லையா?],
6.மதுரா:
உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள மதுரா, விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது[பிறந்தவர் எனின் சாகவும் வேண்டுமே! செத்தாரா?!. கிருஷ்ணர் பிறந்ததாக நம்பப்படும் இடத்திலேயே கிருஷ்ண ஜென்மபூமிக் கோயில் அமைந்துள்ளது.