வெள்ளி, 14 மார்ச், 2025

படைக்கப்பட்டவன் ‘இனவிருத்தி’க்கான கருவி மட்டுமே! ஆகவே படைத்தவன்......

பிறக்கிறோம்; வளர்கிறோம்; அறிவும் ஆற்றலும் உடன் வளர்கின்றன; விதம் விதமான உணர்வுகளும் பண்புகளும் குணங்களும் அரவணைக்கின்றன. 

மேற்கண்டவை அனைத்தும் காலப்போக்கில்  நம்மிடமிருந்து பிரிகின்றன.

இவற்றில் மிச்சமிருந்த கொஞ்சத்தையும் இழந்து வெறுமை சுமந்து மரணத்தைத் தழுவுகிறோம்.

அதாவது, நாம் மரணிக்கும்போது நம்மைப் போலவே நம்மிடம் இருந்தவையும் இல்லாமல்போகின்றன.

எல்லாம் இழந்து இல்லாமல் போனாலும், நாம் உருவாகக் காரணமான மரபணுக்களை நம் வாரிசுகள் மூலம் இம்மண்ணில் விட்டுச்செல்கிறோம்.

எனவே, நாம் பிறந்ததன், அல்லது பிறப்பிக்கப்பட்டதன் நோக்கமே இனவிருத்தி செய்துவிட்டு இல்லாமல்[மரணம்] போவதற்குத்தான்.

இதையேதான், ‘வாழ்க்கையின் ஒரே நோக்கம் மரபணுக்களைக் கடத்துவதுதான்’ என்று அறிவியலும் உறுதிப்படுத்துகிறது.

ஆக, கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவன் தன் படைப்புத் தொழிலுக்குப் பயன்படுத்துகிற ஒரு கருவி மட்டுமே நாம்.

அந்த மோசக்காரனையா அன்பின் திருவுரு, கருணைக் கடல் என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்து கொண்டாடித் திரிகிறார்கள் நம் மக்கள்!?

                                             *   *   *   *   *

//மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரே நோக்கம் தங்கள் மரபணுக்களை[வாரிசுகளை உருவாக்குவதன் மூலம்] கடத்துவதே என்பதால் இறக்கிறார்கள்’[From a scientist's perspective, humans die because their only purpose in life is to pass on their genes...’]//