வியாழன், 13 மார்ச், 2025

இஸ்லாமியரின் மசூதிகளுக்குக் ‘கோஷா’ போடும் சங்கிகளின் ஹோலி!!!

ஹோலிப் பண்டிகை’யை[14.03.2025] முன்னிட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேசத்தின் சம்பல் நகரத்தில் உள்ள ஜமா மசூதி தார்ப்பாலின்களால் மூடப்பட்டது. ஹோலி ஊர்வலப் பாதையில் உள்ள பத்து மதத் தலங்களையும் வகுப்புவாத பதட்டங்களைத் தடுக்க மூட வேண்டும் என்று உள்ளூர் நிர்வாகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

எந்தவொரு மதத்தவர் உணர்வும் புண்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சம்பல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(ASP) ஸ்ரீஷ் சந்திரா தெரிவித்தார்[ஹோலிப் பண்டிகையின் போது 'சௌபாய்' ஊர்வலங்கள் கடந்து செல்லும் மசூதிகளைத் தார்ப்பாலின் மூலம் மூடி மறைப்பது பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் நடைமுறை என்றும் கூறினார்].

அவர் கூறியபடியே ஹோலிக் கொண்டாட்டங்களுக்கு[நடைபெறும் நாள்: 14.03.2025] முன்னதாகச் சம்பல் ஜமா மசூதி தார்ப்பாய்களால் மூடப்பட்டது[1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்> எதிர்த்த இஸ்லாமியர்?].


//“முஸ்லிம்களிடம் ஒரு வருடத்தில் 52 வெள்ளிக்கிழமைகள் உள்ளன. அவற்றில் ஒன்று ஹோலி ப்பண்டிகையோடு ஒத்துப் போகிறது. எனவே, அவர்கள், இந்து மக்களை ஹோலிப் பண்டிகையைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும். அவர்கள் மீது வண்ணங்கள் பூசப்பட்டால் கோபப்படக்கூடாது. அவர்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். https://www.nakkheeran.in/24-by-7-news/india/bihar-bjp-mlas-controversial-says-if-there-problem-muslims-should-stay-inside//

மேற்கண்டவை அடுத்தடுத்து ஊடகங்களில் இடம்பெற்ற அதிர்ச்சியூட்டும் செய்திகள்.

இரு மதத்தவரும் பண்டிகை கொண்டாடுகிறார்களாம்.

மசூதி மறைக்கப்படாமலிருந்தால் இஸ்லாமியர் வழக்கம்போல அங்கே சென்று வழிபடுவார்களாம். ஹோலி ஊர்வலத்தில் செல்லும் காலிகள் அவர்களைத் தாக்குவார்களாம். இரு தரப்பாருக்குள்ளும் மோதல் ஏற்பட்டு அமைதிக்குப் பங்கம் விளையுமாம்.

அதனால்.....

ஜாமா உட்படப் பல மசூதிகள் தார்ப்பாலினால் மூடி மறைக்கப்படுகின்றனவாம்.

இது பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளதாம்[தாக்குகிறவர்களைக் கட்டுப்படுத்தவும், மீறினால் தண்டிக்கவும் மொட்டைச் சாமியாரிடம் காவல் படை[போலீஸ்] இல்லையா?].

இது பல ஆண்டுக்கால வழக்கமாக இருக்கலாம். ஆனால், படு படு படு முட்டாள்தனமான வழக்கம்.

அவர்கள்[இஸ்லாமியர்]. அவர்களுக்கான இடங்களில் வழிபடுகிறார்கள்[அவர்களைத் தத்தம் வீடுகளுக்குள்ளேயே வழிபடச் சொல்வது அவர்களை அவமானப்படுத்தும் செயல்]. இவர்கள்[இந்துக்கள்], அனைவருக்கும் பொதுவான வீதிகளில் ஊர்வலம் போகிறார்கள்.

இங்கே மோதிக்கொள்ள என்ன இருக்கிறது?

காரணங்களாக இருப்பவை.....

பல்லாண்டுக் காலப் பகை; ஒரு தரப்பார் மீது மற்றொரு தரப்பாருக்குள்ள காழ்ப்புணர்ச்சி; அடுத்தவரை அடக்கி/அழித்து, தங்கள் மதத்தை வளர்க்க வேண்டும் என்னும் வெறி.

எனவே.....

மதங்கள்[விதிவிலக்கானவை?] அழிக்கப்படுதல் வேண்டும். தவறினால், மனித இனம் முற்றிலுமாய் அழியும் நாள் வெகு தொலைவில் இல்லை!