எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 12 மார்ச், 2025

புண்ணியப் ‘பாரத்’தின் தவப்புதல்வர் புனிதர் மோடிஜி வாழ்க!!!

[கண்கொள்ளாக் காட்சி!]

மொரிஷியஸ் தீவு நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாகப் புதன்கிழமை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸின் சவன்னேவில் உள்ள 'கங்கா தலாவ்' புனித யாத்திரைத் தலத்தில் பூஜை செய்து[மணிப்பூர் கலவரம் அடங்கி அங்கே முழு அமைதி நிலவிட?] புனித கங்கை நீரை வழங்கினார். 

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலிலும் அவர் பிரார்த்தனை செய்தார்[மொரிஷியஸில் மிகவும் புனிதமான இந்துத் தலமாகக் கருதப்படும் 'கங்கா தலாவ்' நாட்டின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான மலைப் பகுதியில் அமைந்துள்ளது].