எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 2 ஜூன், 2025

இத்தனை நெஞ்சுரம் இவர்களுக்கு[முசோலினி, சதாம் உசேன்] எப்படி வாய்த்தது!?!?

கீழ்க்காண்பவை பலரும் அறிந்த வரலாற்று நிகழ்வுகள். இணையத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பும் வாசிக்க நேர்ந்தது.

ஒன்று:

முசோலினி தான் சுடப்படவிருந்த அந்தக் கணங்களில் உரத்த குரலில் முழங்கினார்: “என் மார்பில் சுடு”{தான் உயிருடன் இருக்கும்போது அவர் சுடப்படுதல் கூடாது என்றெண்ணிய அவரின் மனைவி கிளாரா பெட்டாசி அவர் முன் குதித்தார். இதனால் குண்டு அவளையும் முசோலினி[இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது]யையும் தாக்கியது}.

இரண்டு:

சதாம் உசேன், மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய நாளின் நடு இரவில், அவரைச் சுற்றியிருந்த காவலர்களில் ஒருவரை அழைத்து, தான் கைது செய்யப்படும்போது அணிந்திருந்த கனத்த அங்கியைத் தருமாறு வேண்டினார்.

காவலர் காரணம் கேட்கவே, “அதிகாலையில் என் உயிரைப் பறிக்க இருக்கிறீர்கள். நான் மரணத்திற்காக அஞ்சவுமில்லை நடுங்கவும் இல்லை. ஆனால், இராக்கின் அதிகாலை நேரக் குளிர் ஆளை நடுங்க வைக்கும்.

என்னை நீங்கள் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும்போது குளிரினால் எனது உடல் நடுங்கலாம். அதைப் பார்ப்பவர்கள் சதாம் மரணத்திற்கு அஞ்சகூடியவன் என்று எண்ணுவார்கள். நான் மரண மேடையை நோக்கி நடந்துவரும்போது குளிரினால்கூட எனது உடல் நடுங்கக் கூடாது என்பதால் குளிரில் இருந்து காக்கும் அந்தக் கனத்த ஆடையை அணிய விரும்புகிறேன்” என்று கூறினார்.

------------------------------

மேற்கண்ட இந்த உலகறிந்த தலைவர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ, அவர்களை நினைவுகூரும்போதெல்லாம் என் நெஞ்சு சிலிர்ப்பதுண்டு!

எத்தனை முயன்றாலும் இந்த மனோதிடம் வாய்ப்பது எளிதல்லவே.