ஞாயிறு, 13 ஜூலை, 2025

அழுக்கு நீர் புனித நீர் ஆகுமா? தேவை ஆய்வகப் பரிசோதனை!

டகங்களில் ‘கும்பாபிஷேகம்’ பற்றிய செய்தி இடம்பெறாத நாளே இல்லை எனலாம்.

எங்கெங்கு காணினும் கும்பாபிஷேகம்[குடமுழுக்கு> சமஸ்கிருதச் சொல்லைத் தமிழாக்குவதால் இந்த மூடப்பழக்கம் பயனுள்ள நல்ல பழக்கம் ஆகிவிடாது].

பக்தி வெள்ளம் இந்தப் புண்ணியப் பூமியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாவிகளின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை; அதிகரிக்கிறது.

வேத மந்திரங்கள் ஓதினாலும் தேவாரத் திருவாசகப் பாடல்கள் பாடினாலும், கும்பாபிஷேகிகள் ஆறுகளிலிருந்து குடங்குடமாய் மொண்டு கொண்டுவருகிற அழுக்கு நீர் புனித நீராகிவிடாது.

ஒரு சிறிய சோதனை மூலம் இதை நிரூபிக்கலாம்.

சேகரித்ததில்,  ஒரு குடத்து நீரை இருப்பில் வைத்து, இன்னொரு குடத்து நீரைச் சமஸ்கிருதத்திலோ தமிழிலோ மந்திரங்கள் சொல்லி அபிஷேகம் செய்து, கலசங்களில் அல்லது சிலைகளின் மீது வழிகிற நீரை ஒரு பாத்திரத்தில் சேமிக்க வேண்டும்.

அபிஷேகம் செய்யப்பட்ட நீரையும், செய்யாமல் இருப்பில் வைத்திருந்த நீரையும் ஆய்வகத்தில் பரிசோதித்தால் இரண்டுக்கும் இடையே வேறுபாடு தென்படுமா?

சிலைகளிலும் கலசங்களிலும் படிந்திருக்கும் அழுக்கும், பூக்களின் மணமும் கலந்திருக்குமே தவிர, குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் வேறுபாட்டைக் காண இயலாது.

உண்மை இதுவாக இருக்க, இல்லாத புனிதத்தை இருப்பதாகச் சொல்வதும், இது நம்பிக்கையின்பாற்பட்டது என்று சப்பைக்கட்டுக் கட்டுவதும் அயோக்கியத்தனம் அல்லவா?