எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 15 ஜூலை, 2025

ஓடிமுடித்ததும் பரிசு உண்டு! ஒருங்கிணைந்து ஓடலாம் வாரீர்!!

சில நிமிடங்களில் முடியும் பந்தயம் அல்ல இது; மணிக்கணக்கில் ஓடும் மாரத்தானும் அல்ல.

தொடங்குவது தெரியும்; எப்போது முடியும் என்று ஓடுகிற எவருக்கும் தெரியாது.

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க அவர் அவதாரமாயினும் மகானாயினும் வேறு யாராயினும் அனுமதி இல்லை.

ஓடிக்கொண்டே வேடிக்கை பார்க்கலாம்; வேடிக்கை பார்த்துக்கொண்டே ஓடலாம்.

ஓடிமுடித்த ஒவ்வொருவருக்கும் பரிசு உண்டு.

பரிசின் பெயர்.....

‘மரணம்’!

‘காலதேவன்’[யமன்] மேற்பார்வையில் காலங்காலமாய் நடைபெறும் போட்டி இது.

நடத்துபவர்.....

நம் கருணை வடிவான கடவுள்!