புதன், 16 ஜூலை, 2025

அழியப்போவது இஸ்லாமியரா, ஒட்டுமொத்த மனித இனமா?!

//ஈராக், துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் கொண்ட கூட்டணி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் & இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை. "கடவுளுக்கு எதிராகப் போர் தொடுக்கும் எதிரிகள்"{“கடவுளை ஏம்ப்பா இழுத்துட்டுவந்து களத்தில்[போர்க்களம்] நிறுத்துறீங்க?”> நாம்} என்று முத்திரை குத்திக் கண்டித்தது. 

ஈரானிய மதகுரு ஒருவரால் டிரம்பிற்கு எதிராக ஓர் உயர்மட்டப் படுகொலை அழைப்பு[மதகுருவைக் கொல்லப்போவதாக நெதன்யாகு சொன்னதும் கவனத்தில் கொள்ளத்தக்கது] விடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, இரு தலைவர்களும் ஊழலுக்கும், இரத்தக்களரிக்கும் காரணமாக இருந்ததாகவும், மற்றும் இஸ்லாமிய நிலங்களை ஆக்கிரமித்ததாகவும் குற்றம் சாட்டுகிறது[செய்தி]// 

இதன் உள்நோக்கம் என்ன?

டிரம்புக்கும் நெதன்யாகுக்கும் எதிரான படுகொலை அழைப்பை நியாயப்படுத்துவதுதான்.

மூடி மறைக்காமல் சொன்னால் ‘டிரம்ப்’ஐயும் நெதன்யாகுவையும் படுகொலை செய்வதற்கான மறு அழைப்பு இது எனலாம்.

படுகொலை சாத்தியமா?

சாத்தியப்படுத்துவதற்கு உலகில் உள்ள அத்தனை இஸ்லாமிய நாடுகளும் ஒருங்கிணைதல் வேண்டும்.

இணைந்தால், இஸ்லாம் ஆதிக்கம் இல்லாத பிற நாடுகளும்[ஒரு கட்டத்தில்> வேறு வழியில்லாமல்] ஓரணியில் திரளுதல் நேரலாம்.

இவை நிகழ்ந்து இஸ்லாம் நாடுகளுக்கும், பிற நாடுகளுக்கும் போர்[உலகப் போர்] மூண்டால், அழியப்போவது இஸ்லாமியர் மட்டுமா, ஒட்டுமொத்த மனித இனமுமா?

நாளும் மத வெறியும் ஆதிக்க வெறியும் அதிகரித்துவரும்[சகிக்க இயலவில்லை> மதங்கள் அழிந்து மனிதாபிமானம் மட்டுமே உலகை ஆள மத வெறியர்கள் அனுமதிக்கமாட்டார்கள்] நிலையில் ஒட்டுமொத்த உலகமும் சாம்பல் மேடாகி, பேய்களும் பிசாசுகளும் ஆவிகளும் அங்கே கூத்தாடிக் கொட்டமடிக்கும் அலங்கோலம்/அவலம் உருவாக வேண்டும் என்பது நம் விருப்பம்.

எல்லாம் வல்ல கருணைக் கடவுளின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கக்கூடும்!

                                             *   *   *   *   *

***Global Islam Against Trump, Netanyahu? Huge Declaration After Khamenei Aide's Call: 'Enemies Of God'

New Delhi, July 10 -- A coalition of over 100 Muslim scholars and intellectuals from countries including Iraq, Turkey, and Russia condemned U.S. President Donald Trump and Israeli Prime Minister Benjamin Netanyahu, labeling them "enemies waging war against God." The statement, released days after a high-profile assassination call against Trump by an Iranian cleric, accuses the two leaders of spreading corruption, bloodshed, and occupation of Islamic lands, particularly referencing the war in Iran and the plight of Palestinians> ஜூலை 10, 2025